என்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை தேநீர் இடத்தில் சந்தித்தேன். ஒரு தர்ம சங்கடமா நிலைமையில்தான் இருந்தோம். இரு நாட்டுக்கும் போர் நடக்கும் சமயத்தில் இப்படியொரு சந்திப்பு ஒரு விதமான நமுட்டுச் சிரிப்புடன் அவரை கடந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் வழக்கம் போல, தோளில் தட்டி சகஜமாக பேச ஆரம்பித்தார்.
அவரைப் பற்றி, 1990களில் அமெரிக்க வந்த அவர், அமெரிக்க பிரஜை ஆகி பல வருடங்கள் ஆயிற்று. அவருக்கு 3 மூன்று பெண்கள், அனைவரும் இங்கே பிறந்ததால் அமெரிக்க பிரஜைகள்தான். அமெரிக்க வெள்ளை நிறப்பெண்களும் அவர்களுக்கும் சிறிது வித்தியாசமும் இல்லாதவாறுதான் இருப்பார்கள். இந்திய அமெரிக்க மக்களைப் போலதான் அவருக்கும் பாக் மக்களுடனான நெருக்கமும் இருக்கும். ஹலால் கடைகளில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். கிரிக்கெட் பார்ப்பார், அவரது பெற்றோரை, சகோதர குடும்பங்களைப் பார்த்து வர இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாக் போய் வருவார்.
இன்று காலை அவரிடம் பேசியதிலிருந்து ஒரு சில : பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். (அவர் பிறந்து வளர்ந்த காலத்தில் நல்ல கட்சியாக இருந்ததாம்). இப்போது அவர் பாகிஸ்தானில் இருந்தால் அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பாராம். பாகிஸ்தானில் இரு கட்சிகள்தான் பிரதானம் நம்ம திமுக, அதிமுக மாதிரி வெச்சிக்குவோம். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பல கட்சிகள் இருந்தாலும் இவை இரண்டும்தான் கடந்த காலத்தில் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்துக்கொண்டவை. 1996 க்குப் பிறகான இம்ரான் கானின் அரசியல் பிரவேசம் பாகிஸ்தான் மக்களிடம் நிறைய மன மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறதாம். கட்சி ஆரம்பித்து 22 வருடங்கள் கழித்தே அவர் ஆட்சியில் அமர்ந்தார், அதுவும் கூட்டணி ஆட்சிதான் எனினும் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறார். பாகிஸ்தான் இளைஞர்கள் அனைவரும் இம்ரான் கட்சியின் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
அவர் ஆட்சியேற்ற பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்கிறார். இம்ரானுக்கு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் POK அதிகம் நாட்டமில்லை, காரணம், அதற்காக பாகிஸ்தான் செலவழிக்கும் பணத்தை வேறு நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம், அதுவுமில்லாமல் தேவையில்லாத பதட்டம் வேறு. இன்னொன்றையும் அவர் சொன்னது : பாகிஸ்தான் ஊடகங்கள் சமீப காலமாக உண்மைகளைச் சொல்லி வருகிறார்களாம். முன்னெல்லாம் ஆட்சி பீடத்தில் சொல்லும் செய்திகள்தான் வருமாம்.
இந்தப் பிரச்சினை பற்றி அவர் சொன்னதை அப்படியே தருகிறேன். இன்றைய நிலையில் அமைதியை விரும்பும் இம்ரான் இந்தியாவிடம் போரிடுவதை விரும்பவில்லை. அவரது பார்வையில் இந்திய அரசாங்கம் வீணாக வம்பு வளர்கிறது. அதற்குக் காரணம் அவர்களது தேர்தல்களம். இன்றைய இந்திய வீரரை சிறையெடுத்ததும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கத்தான், ஆனால் இன்றைய இந்திய அரசாங்கம் போரையே விரும்புவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த இரண்டு நாட்களாக சொல்லிவருகிறார்களாம். தேர்தல், வாக்கு என்று இரண்டுமே பாகிஸ்தானின் இன்றைய தேவையில்லை. அதனால இதில் அரசியல் செய்ய இம்ரான் கானுக்கும் விருப்பமில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு ஐ. நா சபையை நாடலாம் என்றும் நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை. அரசியலுக்காகவும் வாக்குக்களுக்காகவும் மக்களைத் தூண்டிவிட்டதன் விளைவை இன்று காஷ்மீரத்து மக்கள்தான் அனுபவித்து வருகிறார்கள், அதாவது இந்திய மக்கள். இதைச் சொல்லி முடிக்கும் போது அவர் உண்மையாகவே வருத்தப்பட்டதாகத்தான் உணர்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் முற்காலத்தில் அரசியலுக்காகவும், வாக்குகளுக்காகவும் காஷ்மீரத்தை வைத்து மதம் பூசி நன்றாக கொளுத்திருக்கிறார்கள் பாகிஸ்தானின் இரு கட்சியினரும். இன்று அதை இம்ரான் விரும்பவில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனாலும் பாகிஸ்தான் சமூக ஊடகளிலும் நிறை வதந்திகளையும், பொய் படங்களையும் பரப்பி வருகிறதாகவும் வருத்தப்பட்ட்டார்.
இதில் என் பார்வை என்னவென்று கேட்டார் "எனக்கு முழு உண்மையறியவே முடியவில்லை. காரணம் எந்த ஊடகமும் சரியான தகவல் தரவில்லை. இதில் சமூக ஊடகங்களில் ஆளும் கட்சி ஆதரவாளர்களின் தாண்டவம் வேறு சந்தேகத்தை நிச்சயமாக்கியது. நேற்று வரை கொண்டாடிய ஊடகங்கள், இன்று BBC, Reuters, Aljazeera போன்ற ஊடகங்கள் இந்திய இராணுவத்தாக்குதலில் எந்த சேதாரமும் என்று சொன்னதும் நேற்று சொன்ன சேதியை மழுப்பலாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள், NDTVயோ, மறைமுகமாக ஏதோ நடக்கிறது, எதையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை பின்வாங்க ஆரம்பித்து விட்டது. இம்ரானின் இன்றைய மாலை நேரத்து (PKT) பேட்டியும் நண்பர் சொன்னதை நிஜமென நம்ப வைக்கிறது. கேப்டன், அர்ஜுன் காலத்தில் (1990களில்) சொன்னது எல்லாம் எவ்வளவு நிஜமென்று நம்பியிருந்தாலும் கால மாற்றதில் யாரும் போரை விரும்புவதில்லை, அதிலும் செலவு பிடிக்கும் விசயம். அமெரிக்கா போரை விரும்புகிறதென்றால் அதில் வியாபாரம் இருக்கிறது. பாகிஸ்தான் போரை விரும்ப என்ன இருக்கிறது அரசியலும் வாக்குகளையும் தவிர. ஆனாலும் அவர்கள் போட்ட விதை முளைத்திருக்கிறது. அறுவடை செய்யும் காலத்தை இரு நாடுகளுமே எட்டிவிட்டார்கள். நல்லது நடக்கட்டும். மீட்டிங்கிற்கு நேரமாயிற்று, அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.
அமெரிக்கா இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. காரணம் இன்று ட்ரம்ப் அவர்களும் வட கொரிய அதிபரும் சந்தித்துக்கொள்கிறார்கள், அதனால் இந்திய- பாகிஸ்தான் பிரச்சினை எல்லாம் கண்டுக்கொள்ள நேரமும் இருக்காது.
நாளையும் நாங்கள் இருவரும் இதே போல தேநீர் பருகுவோம், பேட்மிண்டன் விளையாடுவோம், நண்பர்களாத்தான் இருக்கப் போகிறோம்.