நான் சிறுவனாக இருக்கையில்
செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம்
அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார்
கிடைக்கும் சில்லறைகளை அப்படியே தந்துவிடுவார்.
மாசக் கடைசியென்றால் முறைத்துப் பார்ப்பார்
இல்லையென்பதாக நான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர் தரும் சில்லறைகளுக்கு பீடி நாற்றமிருக்கும்,
சில நேரங்களில் வெற்றிலை வாசமிருக்கும்,
சில நேரங்களில் புகையிலை வாசமிருக்கும்,
சில நேரங்களில் திருநீறுவாசமிருக்கும்,
சில நேரங்களில் மல்லிகைப் பூ வாசமிருக்கும்,
சில நேரங்களில் சாராயம் வாசமிருக்கும்,
சில நேரங்களில் அழுக்கு வாசமும் இருக்கும்.
அப்பா கொடுக்க மறுத்த பணத்திற்குப்பின் அம்மா தரும் பணத்திற்கு பல வித வாசனைகள் இருக்கும்
சில நேரங்களில் பொட்டுக்கடலை வாசனையிருக்கும்,
சில நேரங்களில் பச்சரிசி வாசனையிருக்கும்,
சில நேரங்களில் வர மிளகாய் வாசனையிருக்கும்,
சில நேரங்களில் கடலைப் பருப்பு வாசனையிருக்கும்,
சில நேரங்களில் கொத்தமல்லி வாசனையிருக்கும்,
சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு பணத்திற்கான வாசனை இருப்பதில்லை,
சட சடவென ஏடிஎம் ஓடும் சத்தம் கேட்கும்,
பிறகு அதனை பர்சில் வைப்பதை வழக்கமாகிவிட்ட எனக்கு
அதன் வாசனையை மட்டும்
ஏனோ நுகரத் தோணுவதே இல்லை...
ஆனாலும்
அம்மா தரும் பணத்திற்கும் என்றுமே வாசனையுண்டு!