படம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை
1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக்காமல் படம் வந்திருக்கிறது
2. வழக்கமாக ரஜினி படங்களில் சோகமான முடிவுகள் இருக்காது. இப்படம் அதில் விதி விலக்கு
3. ராதிகா ஆப்தேவிற்கு விருது கிடைக்கும்
4. பின்னணி இசை அமைத்ததிலேயே இந்தப் படம்தான் டாப்
5. தர்மதுரை, படையப்பாவிற்குப் பின் ரஜினி அவர்களுக்கு வயதான வேடத்தில் சிறப்பாக அமைந்த படம் இது
{படத்தின் செய்தித் துணுக்குகளை வைத்து பட்டி பார்த்து டிங்கரிங் செய்தவை, மேலே சொன்னவை உண்மையாகக் கூட இருக்கலாம்}
கதை: மலேசியாவில் கொத்தடிமைகளின் காலத்தில் போராடும் ரஜினிகாந்த் பெரிய
டான்'ஆக மாறுகிறார். இதனால் அவருக்கு தமிழ் அல்லாத சில மக்களால் தொல்லை.
எதிரிகளால் அவரது சில குடும்ப நபர்களின் உயிரிழப்புகளின் காரணமாக பொது
வாழ்க்கையிலிருந்து மறைந்து வாழ்கிறார். சுமாராக அவரது 55 வயதில் மீண்டும்
இருட்டுலகில் இருந்து வெளி வந்து அதே எதிரிகளை எதிர்க்க வேண்டி வருகிறது.
மீண்டும் அவருடன் இணைகிறார்கள் பழைய நண்பர்கள். எதிரிகளை ரஜினிகாந்த் பழி
வாங்கினாரா இல்லையா என்பதே இறுதிக்காட்சி.