அப்பாடக்கர் உருவானவிதம் - முதல் பாகம் படிக்க
ஸ்ரீராம் மற்றும் ஜெயவேலன் ஆகியோரைக் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். முதல் நாள் வெளிப்புற படப்பிடிப்பில் மூவருமே பேந்த பேந்த முழித்தோம். மூவருக்குமே ஒன்றும் தெரியவில்லை.(இப்ப மட்டும் தெரிஞ்சிருச்சாக்கும்). ஆனால் அடுத்த நாளில்
ரெண்டு பேருமே சீக்கிரமே நடிப்புக்கலையை கற்றுக்கொண்டது நான் செய்த புண்ணியம். அவர்களை நான் படுத்திய பாடு எல்லாம் Editingல் தெளிவாகத்தெரிந்தது. சில இடங்களில் “உன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே” என்றவாறு முக பாவனை எல்லாம் துள்ளியமாக புரிஞ்சிக்க முடிஞ்சது.
சில பெரிய காட்சிகள் எல்லாம் ஒரே takeல் முடிந்தது. ஸ்ரீராம் - சரக்கு காட்சி எல்லாம் ஒரே takeல் எடுத்ததுதான். ”Voiceover(dub) பண்ணிடலாம் வாங்க ஸ்ரீராம்” என்ற போது, ”இல்லீங்க இனிமே அதை செய்ய முடியாது” என்று சொல்ல Live Recordingஐ அப்படியே வைத்துக்கொண்டோம்.
சரக்கு சீனில் ஒவ்வொரு ரவுண்டுக்கும் இப்படி வைப்பதாகதான் இருந்தது. மங்காத்தாவில் பிரேம்- அஜித் காட்சியிலும் இப்படியே வர ஸ்ரீராம் கடைசி நேரத்துல ஒரு யோசனை சொன்னாரு, “ரவுண்ட்(வட்டம்) மட்டும் போட்டுக்கலாமே” என்று. குத்துச்சண்டையில் ரவுண்டுக்கும் வரும் சப்தம் ஞாபகத்துக்கு வர அப்படியே அமைத்தேன். ஆனா அது யாருக்கும் புரியல (Epic Fail) சரியா, தகவல் போய் சேரலை. Stop Clock சப்தத்தையும் சேர்த்திருந்தேன், அதை பாஸ்டன் பாலா சரியா கண்டுபுடிச்சிருந்தாரு.
என்னதான் படத்தை தெளிவா எடுத்துட்டாலும் Editing என்று வந்த பிறகுதான் தெரிந்தது, 35 GB இருந்தது raw files. அதுவரைக்கும் சுலமாக தெரிந்தது எல்லாமே கஷ்டமாக தெரிந்தது. வடிவேலு சொல்வது போல, ஒரு நாள் எல்லாமே தேவை இல்லாத ஆணிகளாகவே தெரிந்தது.அடுத்த நாள் எல்லாமே தேவையான ஆணிகளாகத் தெரிந்தது. ஜெயவேலன் இல்லாத நேரத்தில் டப்பிங் செய்யவேண்டும். இந்தியாவிலிருந்தே செய்ய முடியுமா என்று முயற்சித்தேன். அவருக்கு கல்யாண வேலை.
ஆமாம், ஜெயவேலைனுக்குத்தான் திருமணம். அதிக அழுத்தம் வேறு தரமுடியாத நிலை. ஆனால் அவரே பேசினால் நல்லது என நினைத்தேன். வேறு வழியில்லாமல் அவருக்குப் பதிலாக வேறொருத்தர் செய்துவிடலாம் என முடிவு செய்தேன்.வேறு யார் செய்ய, நானேதான். படம் ஆரம்பத்தில் திருநெல்வேலி களத்துடன் ஆரம்பித்தது, படத்தையும் திருநெல்வேலி பாசையிலேயே எடுத்துட்டு பிறகு கோவை வட்டார மொழிக்கு மாற்றினேன், காரணம் நமக்கு என்ன வருமோ அதைத் தானே செய்யனும்/பேசனும். சரியாகப் பொருந்திப்போக(போவல), சும்மா எடுத்த சில காட்சிகளை வைத்து ஒப்பேற்றினேன்.
இது எல்லாம் எழுதப்படவே இல்லை. எடிட்டிங் முடிந்த பிறகே ஸ்ரீராமிற்கே தெரிந்தது. இடையிடையே ஸ்ரீராமும் நானும், பல விதமாக காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தோம். எப்படி காட்சிகளை அமைத்தாலும்
வேறு வேறுவிதமான பரிமாணங்கள் வருவதைக்கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுக்கொண்டோம். அதிசயித்தோம்.
எடிட்டிங் என்பது பெரும் கலை.உண்மையைச் சொன்னால் கத்திரி வைப்பதில் தான் படத்தின் ஓட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகில் இருப்பவர்களுக்கு தெரிவதேயில்லை.
இசைக் கோப்பிறகாக ஒரு வார காலமானது. அப்படி இப்படியென 4 மாத காலமானது. பல இரவுகள் 2 மணி வரைக்கும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். கண்டிப்பாக 80-100 மணிநேரமாவது
உழைத்திருப்பேன் என நினைக்கிறேன். ஒரு வாராக 6 நிமிடத்திற்கு ஜெயவேலன் இல்லாமலேயே படம் முடிந்தது. வெளியிடும் நேரத்தில் எனக்கு ஒரு தயக்கம். காரணம், படம் எனக்குப் பிடிக்கவில்லை, அடுத்தது negative thought உருவாக்கம். IT பத்தின இந்த விசயங்கள் பெரிதாக பேசப்படவில்லை எனினும் இந்தப் படம் தெளிவாகவே அதைச் சொன்னது. ஸ்ரீராம் கோபத்தின் உச்சநிலையை அடைந்திருந்தார், ருத்ரதாண்டவம் ஆடாதது ஒன்றுதான் குறை. படம் வந்தே ஆகவேண்டும் என்று அவரே கடைசியாக ஒரு நாள் குறித்தார். அதற்கு முன்னரே படம் முடிவடைந்திருந்தது. சொன்னதேதியில் ஸ்ரீராமிம் கையால் படம் வெளியிடப்பட்டது. ஆனால தமிழோய்வியம்தான் படம் வெளியிடுவதாக இருந்தது. எங்களுக்குள் இருந்த குழப்பத்தால், இரு பக்கமும் படம் ஒரே நாளில் வெளியானது.
இதற்காக சில குரல்களை மட்டும் வெளியிடத்தில் வாங்க வேண்டியிருந்தது, நாட்டாமையாக கணேஷ் சந்திராவும், நாயராக நிஜமாகவே ஒரு மலையாள் நண்பரும் உதவினார்கள். பதிவர்கள் மட்டுமே முதல் நாளில் அதிகம் பார்த்தார்கள் என நினைக்கிறேன், தெரிந்தவர்கள் ஆதலால் யாரும் பெரிதாக குறை சொல்லவில்லை. நல்ல நண்பர்கள். Gregopaul எனும் twitter நண்பர்கள் படத்தை அங்குலம் அங்குலமாக விமர்சித்தார், திரைப்பட்த்தில் ஒளிப்பதிவாளராக இருக்கும் அவர் படத்தினைப்பார்த்த கோணம் வித்தியாசமாக இருந்தது.
இந்தப் படத்திற்காக செலவு என்பது செய்யப்படவே இல்லை. ஆமாம், படம் பிடிக்கத்தேவைப்படும் சில கருவிகள் வாங்கியதைத்தவிர படத்தில் செலவு என்பதே இல்லை. படம் பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் iPhoneலயே பிடிக்கப்பட்டது. ஒரு படம் எடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதும் எவ்வாறாக படம் எடுக்கவேண்டும் என்பதற்கான முதல் புள்ளியையும் கற்றுக்கொடுத்தது இந்தப் படம்.
உண்மையைச் சொன்னால், போனமாதம்தான் நானே அந்தப் படத்தை முழுதாக பார்த்தேன். இவ்வளவுநாள் கழிச்சு பார்க்கும்போது நான் செய்த தவறுகள் நிறையத் தெரிந்தன. Editingல் செம சொதப்பல், நீளம், ஏகப்பட்ட தேவையில்லாத காட்சிகள். ஹ்ம்ம், கத்துக்கிட்டா இதையெல்லாம் செய்யறோம். ஆனா மனசுக்குத் திருப்தியா நாம நெனச்சது வரும்போது ஒரு சந்தோசம் வரும்பாருங்க...
ஆனா ஒன்னு சொல்றேங்க, படம் எடுக்கிறது ரொம்பக் கஷ்டங்க.