இப்படித்தாங்க ஆரம்பித்தது அப்பாடக்கர் என்னும் குறும்படம். அதிகப் பொருட்செலவு இருக்கக்கூடாது, கண்டிப்பாக கருத்துச் சொல்லக்கூடாது, சோகம் இருக்கக்கூடாது. இது எல்லாம் நாங்களே வைத்துக்கொண்ட அளவுகோல். ஒரு வழியாக நானும் ஸ்ரீராமும் ஒரு கதை தயார் செய்தோம். அதாவது Oneline. ஆங்கிலம் பேசத் தெரியாத ஒரு கிராமத்தான், நகரத்தில் வசிக்கும் அதுவும் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் அவனுடைய நண்பனான அறைக்கு வந்து அவனுக்கு கிடைக்க இருக்கும் வேலையப் பறித்துக்கொள்கிறான். இதுதான் நாங்கள் நினைத்து வைத்த கதை. வசனம் எழுத இந்தா அந்தா என்று கொஞ்சம் காலம் பிடிக்க இதே சாயலுடன் "பெங்களூரு" என்ற இன்னொரு குறும்படம் வெளியானது. மறுபடியும் நானும் ஸ்ரீராமும் பேசினோம் பேசினோம், பேசினோம். அப்படி உருவான கதைதான் அப்பாடக்கர் (கதையே இல்லைன்னுதான் கடைசி வரைக்கும் நம்பிட்டு இருந்தோம்) முதல் நாள், வெளிப்புற படப்பிடிப்பு போகும்போது, அதாங்க வீட்டுப்பக்கத்துலயே ஒரு குன்று இருந்துச்சு, ஒரு குளம் மாதிரி,. அதை வெச்சிதான் இந்தியான்னு நம்ப வெக்கனும் , ரொம்ப தூரம் எல்லாம் இல்லீங்க, வீட்ல இருந்து 300 மீட்டரில் இருந்தது வெளிப்புற படப்பிடிப்புத்தளம். போன பின்னாடிதான் தெரிஞ்சதும். காட்சி அமைப்பு மட்டும் வெச்சிகிட்டு On the Spot வசனம் முயற்சி பண்ணினோம், பல்ல இளிச்சிருச்சு.
அடுத்த நாள் வசனம், முழு கதைக்களம், வசனம் தயார் செய்து கேபிள் சங்கரிடம் கொடுத்து விவாதித்து, சரி செய்து கொண்டேன். அதாவது Bounded Script தயாராகிவிட்டது. ஆனா அது சத்தியமா Bounded Script இல்லைன்னு அப்புறம்தாங்க தெரிஞ்சது.
ஸ்ரீராமும் நானும் அருகருகே குடியிருப்பதால் தினமும் ஏதோ சும்மானாச்சுக்கும் சந்தித்து இது பற்றி பேசிப் பேசியே எங்களையே உசுப்பேற்றிக்கொண்டோம். முதலில் படப்பிடிப்புக்கு கருவிகள் வேணுமே. அதாங்க, camera, Dolly editing tool, இத்யாதிகள். முதலில் ஒரு Dolly செய்தேன், அதுவும் நாங்களே கடைக்குப் போய், சின்ன விசயங்களையும் பார்த்து செய்தது. எப்படி செஞ்சோம்கிறதுக்கு இந்தப் படமே சாட்சி.
இதுல இன்னொரு சிக்கல் என்னன்னா கதை இந்தியாவுல நடக்கிற மாதிரி. ஒரு அறை வேண்டும், வாரிசோட அறையை மாற்றுவதாய் எண்ணம். படங்கள் தயார், இந்தியாவில் இருப்பது போன்ற பாய் வேண்டும், படுக்கை விரிப்பு வேண்டும், காரணம் American Carpet Floor. அதனால் தரையை முழுக்கவே மறைத்தாக வேண்டிய கட்டாயம். படங்கள் சுலபமாகக் கிடைத்தது, நன்றி இணையம். படுக்க விரிப்புகள் சமாளிக்கப்பட்டது. ஆனால் பாய், தேடியலைந்து ஓரிடத்தில் கிடைத்தது. பொம்மைகள் நிறைந்த வாரிசின் அறையை இந்திய அறையாக மாற்றம் செய்ய 45 நிமிடங்கள் ஆகும். படப்பிடிப்பு முடிந்தால் மீண்டும் மாற்ற மற்றொரு 45 நிமிடம் ஆகும். தொடர்ந்தும் படமெடுக்க முடியாத நிலை. வேறென்ன கால்ஷீட் பிரச்சினை. இவர் வந்தால் அவரில்லை. அவர் இருந்தால் இவரில்லை.
எப்படியோ முதல் நாள் உட்புற படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. நடிப்பதற்கு நூல் பிடித்துக்கொண்டார்கள் ராமும், ஜெயவேலனும். நடிப்பு வரும் என்பது அவர்களுக்கும் தெரியவில்லை, எனக்கும் தெரியவில்லை. ஆனால் காட்சியமைப்போடு அட்டகாசமா ஒன்றிப் போனார்கள். ஒவ்வொரு முறை வசனம் பேசும் போதும் மெருகேற்றிக்கொண்டே இருந்தோம். முதல் நாளே திருப்தியாக முடிந்தது. நான்கு நாட்கள் வெளிப்புறத்திலும்(தலா 30 நிமிடங்கள்), 6 நாட்கள் உட்புறத்திலும் படம் எடுத்தாயிற்று. இடையே வாரிசு நடிக்கும் காட்சி சேர்க்கப்பட்டது. இந்த சமயத்தில் படத்தின் இன்னொரு நாயகனான ஜெயவேல் இந்தியாவிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.கதையை எப்படி முடிப்பது என்று நான் தெளிந்து வருவதற்குள் ஜெயவேலன் இந்தியா கிளம்பினார்.
பதிவு ரொம்ப நீளமா போவுது, அதனால படத்தைப் பார்க்கலைன்னு பார்த்துடுங்க.
- இருக்கிறதே ரெண்டு பேரு, ஒருத்தர் இல்லாமையே எப்படி படம் முடிக்கிறது?
- நாங்க படத்தை முடிச்ச நேரத்துல மங்காத்தாவுலயும் நாங்க வெச்ச காட்சி மாதிரியே ஒன்னு இருந்துச்சு. அதை மாத்த என்ன பண்ணினோம்..
--
--
..