Monday, November 21, 2011

ஞாநியின் சொந்த ஊர் எதுவென்று தெரியுமா?

இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய இந்த கட்டுரை, நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை.... சில பதிவுகளை படித்தவுடன் நம் உணர்வுகளைப் பிரதிபலிப்பது போலவே இருக்கும். அப்படியாப்பட்ட பதிவுதான் இது. நான், பொதுவாக பதிவுகளை பிரதியெடுத்து வெளியிடுவது இல்லை எனினும், இந்தப் பதிவுக்காக அந்த விதியை சிறிதே தளர்த்திக் கொள்கிறேன். காரணம் நான் எழுதிய ஆணிவேர் என்ற கதையும் இதனை ஒட்டியே இருக்கிறது.  ஞாநி அவர்களை மாதிரியே நானும் பின்புலத்தில் என் சொந்த கிராமத்தில் பெயருடன் நானும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் போனமுறை ஊர் சென்ற போது, சாலை விரிவாக்கத்தில் அந்த மஞ்சள் நிற ஊர்ப் பலகையும் காணாமல் போய்விட்டது :(

இன்னும் சில நூறு பேரை இது சென்றடைய வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம். நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்,இட்லிவடை,ஞாநி


சென்ற வருடம் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஒவ்வொரு விமான நிலையத்திலும் என் பாஸ்போர்ட் பெயரில் இருக்கும் பூர்விக ஊர் பெயரை அதிகாரிகள் கஷ்டப்பட்டுப் படிக்கும்போதெல்லாம், அந்த ஊரை இதுவரை நான் பார்த்ததே இல்லையே என்ற வருத்தம் மேலெழுந்துகொண்டே இருந்தது. எங்கள் குடும்பத்தில் என் அப்பாவைத் தவிர வேறு யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை.

ண்மையில் புரிசை கிராமத்தில் நடந்த புரிசை கண்ணப்ப தம்பிரானின் நூற்றாண்டுக் கலைவிழாவில் எங்கள் பரீக்‌ஷா குழுவின் நாடகம் நடத்த அங்கே செல்லவேண்டியிருந்தபோது, பயண வசதிகளை முடிவு செய்வதற்காக கூகுள் மேப்களை அலசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் புரிசையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் என் பூர்விக ஊர் நல்லூர் இருப்பதைக் கவனித்தேன். இரவு நாடகத்தை முடித்துவிட்டு, அதிகாலையில் நல்லூர் போகலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் நாடகம் முடியும்போது நள்ளிரவு ஒரு மணி. அந்த நேரத்திலும் சுமார் 100 பேர் நாடகம் பார்த்தார்கள். நாங்கள் சுமார் இரண்டு மணிக்கு புரிசை கிராமத்திலேயே ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கப் போனோம்.

ல்லூர் ஆற்காடு அருகே இருக்கும் கலவை என்ற சிறு நகரை ஒட்டிய கிராமம். நல்லூரை அடைந்ததும் எங்கே யாரிடம் என்ன சொல்லி எதை விசாரிப்பது என்று எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அந்த ஊரில் எங்கள் குடும்பத்துக்கு நிலம், வீடு எதுவும் இல்லை. உறவினர்கள் யாரும் இல்லை. என்னிடம் இருந்த இரண்டு தகவல்களில் ஒன்றால் எந்தப் பயனும் இல்லை.

என் தாத்தா முனுசாமி அந்த ஊரின் முன்சீப்பாக இருந்தவர். அடுத்து என் அப்பாவும் அந்தப் பரம்பரை முன்சீப் வேலையை ஓரிரு வருடம் பார்த்துவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டார். அப்பா ஊரை விட்டு வந்த வருடம் 1927! இன்னொரு தகவல் அப்பாவின் பங்காளி சகோதர உறவினரான நல்லூர் சோமசுந்தரம் என்பவர், விடுதலைப் போராட்ட வீரர் என்பதாகும்.

முதலில் ஒரு வீட்டு வாசலில் கண்ணில் பட்டவரிடம் கேட்டேன். அவர் எல்லாத் தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார். அவர் பெயர் முனுசாமி! பஞ்சாயத்து அலுவலக ஊழியர். சோமசுந்தரத்தின் வீடு இன்னும் இருப்பதாகவும் அவரது குடும்ப வாரிசுகள், உறவினர்கள் பலர் ஊருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார். ஊரில் இருக்கும் பழைய சிவன் கோயிலை அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருப்பதாகவும் சொல்லி என்னை அந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். சோமசுந்தரத்தின் வீட்டையும் சுற்றிக் காட்டினார்.

கோயிலும் வீடும் என் ஆர்வத்துக்குரியன அல்ல. அந்த அக்ரஹாரத் தெருவின் முடிவில் மிகப் பெரிய மரம் ஒன்று. அதன் வயது சுமார் 200 வருடங்கள் என்றார்கள். அதுதான் சுவாரஸ்யமான கற்பனைகளைத் தூண்டியது. இருபது வயது வரை இங்கே இருந்த என் அப்பா, அந்த மரத்தின் கீழ் விளையாடியிருப்பாரா, நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பாரா என்றெல்லாம் யோசித்தேன்.

இப்போது ஊரின் மக்கள்தொகை சுமார் இரண்டாயிரம். சரிபாதி காலனியில் தனியே வசிக்கும் தலித்துகள். அப்பா காலத்தில் இதில் சரிபாதிதான் மொத்த மக்கள்தொகையாக இருந்திருக்கலாம்.

ஊருக்குள் நுழைந்து பஞ்சாயத்து ஊழியரைச் சந்தித்தது முதல், ஊரை விட்டுத் திரும்பி கலவை, ஆற்காடு வழியே சென்னை வந்தபின்னரும் கூட, எனக்கு நிறைய செல்பேசி அழைப்புகள் வந்தபடி இருந்தன. எல்லாரும் நல்லூரிலிருந்து தொலைதூர மாநிலங்கள், வெளியூர்கள் சென்று குடியேறியவர்கள். பெரும்பாலோர் சிவன் கோயிலைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பல நூறு வருடங்கள் முந்தைய பழைய கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய பெருமையும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்தது.

எனக்கு ஆர்வமில்லாத விஷயம் அது. என்னை இன்னமும் உறுத்தும் கேள்வி ஏன், தங்கள் சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வாழ்வோர் பலரும் (எல்லோரும் அல்ல), ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?

கலவை பகுதியில் ஆண்களை விடப் பெண்களே மக்கள் தொகையில் அதிகம். ஆனால் பெண்களின் எழுத்தறிவு 59 சதவிகிதம்தான். நல்லூர் கிராமத்தில் ஒரு நூலகத்தைப் பார்த்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒவ்வொரு வேளையும் ஒரு உறவினர் வீட்டில் போய் சாப்பிட்டுப் படிக்க வேண்டிய வறுமையில் இருந்த என் அப்பாவையும் அடுத்து எங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தது படிப்புதான்.

சொந்த ஊர் என்பது சிலருக்கு நெகிழ்வான உணர்வுகளை எழுப்புகிறது. எனக்கும் செங்கற்பட்டு அப்படிப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனக்கு அதுதான் சொந்த ஊர். ஆனால் ஒவ்வொரு முறை செங்கற்பட்டுக்குப் போகும்போதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவது பழைய நினைவுகள்தான். இப்போதைய ஊரைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் கோபமும் வருத்தமும்தான் வருகின்றன. ஊரே கடை வீதியாக மாறிவிட்டது. சாலைகள் எல்லாம் யுத்தம் நடந்த பூமி போல இருக்கின்றன.

நண்பர்களோடு மகிழ்ச்சியாகச் சென்று உலாவிய ரேடியோ மலை மர்ம தேசமாகி விட்டது. வேறு எந்த ஊரிலும் எனக்குத் தெரிந்து ஊருக்கு நடுவே சிறு குன்று கிடையாது. அதன் மீது ஒரு பூங்கா, நகராட்சியின் வானொலி எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. அதனால்தான் ரேடியோ மலை என்று பெயர். அண்மை யில் சென்றபோது குன்றேறிப் பார்த்தேன். அங்கே இருந்த அச்சுறுத்தும் தோற்றத்தில் சிலர் முறைத்த முறைப்பில் திரும்பிவிட வேண்டியதாயிற்று.

நான் தவறாமல் மாலை நேரங்களில் நண்பர்களுடன் சடுகுடு விளையாடிய வேதாசலம் நகர் அழகேசனார் தெரு பூங்காவும் விளையாட்டுத் திடலும் சிதிலமடைந்து கிடந்தன. அதை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தார்கள். வருடம் முழுவதும் விதவிதமான விளையாட்டு வீரர்களுடன் உயிர்த்துடிப்போடு காணப்பட்ட சீர்திருத்தப்பள்ளி விளையாட்டுத் திடல் பாழடைந்து ரயில்வேயின் கோடவுனாகக் கிடக்கிறது. குளவாய் ஏரியைத் தூர்த்து ப்ளாட் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதன் ஆயக்கட்டு வயல்கள் எல்லாம் பைபாஸ் சாலையினால் ஏற்கெனவே ப்ளாட்டுகளாகிவிட்டன.

ஒரு காலத்தில் நமக்குப் பெருமகிழ்ச்சி தந்த பல விஷயங்கள் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவை ஆகிவிடுகின்றன. இளம் வயதில் தினசரி மணிக்கணக்கில் அரட்டை அடித்த நண்பனை முப்பது வருடம் கழித்து சந்திக்கும்போது, பழைய சந்தோஷங்களின் தொடர்ச்சியாக இப்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் இருவருக்கும் பேச எதுவுமில்லை. பகிர எதுவுமில்லை. கால ஓட்டத்தில் இருவரின் மதிப்பீடுகளும் வெவ்வேறு திசைகளில் போய்விட்டதே காரணம். மாறாக ஒரு வாரம் முன்பு அறிமுகமான ஒருவருடன் மணிக்கணக்கில் பேசுகிறோம். இருவருக்கும் இடையில் பொது அக்கறைக்குரியவை நிறையவே இருப்பதே காரணம்.

உறவுகளைச் சடங்குகளாகவோ, அல்லது வெறும் பழக்கத்தினாலோ அல்லது வேறு வழியில்லாமலோ தொடரும் போது அவை சுமையாக மாறுவதுதான் நிகழும்.

உறவாடக் கற்றுக்கொள்வோம் என்பதுதான் நான் அண்மையில் குடந்தையில் நடத்திய ஒரு பயிலரங்கத்தின் செய்தி. லயன்ஸ் க்ளப் இதை ஏற்பாடு செய்திருந்தது. லயன்ஸ் மாவட்டம் 324ஏவின் இப்போதைய ஆளுநர் ராமராஜன் இந்த வருடம் வித்தியாசமான சில பயிலரங்குகளை நான் நடத்தித் தரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். நானும் என் தோழி பத்மாவும் அவற்றைச் செய்து தரப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

லயன்ஸ் உறுப்பினர்கள் தம்பதிகளாக வந்து பங்கேற்கும் பயிலரங்கம் இது. அரசியல், கல்வி, மீடியா, வணிகம் எல்லாமே கடும் சிக்கல்களுடன் இருக்கும் சூழலில், தனி வாழ்க்கையில் உறவுகளும் எவ்வளவு சிக்கலாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்ந்து என்ன செய்யலாம் என்ற கவலையிலும் ஏக்கத்திலும் இருக்கிறார்கள். போலி கௌரவமும் அதிகாரப் பார்வையும்தான் பல உறவுகளை நாசப்படுத்துகின்றன. அன்பும் பரஸ்பர மதிப்பும் மட்டுமே நம்மை மீட்கும்.

இன்னொரு பயிலரங்கம் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு, பத்து வாழ்க்கைத் திறன்களை அறிமுகப்படுத்துவதற்கானது. மாணவர்கள் துடிப்பாக இருக்கிறார்கள். ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வசதிகளும் வாய்ப்புகளும் மட்டும் தான் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பயிலரங்கங்கள் அவர்களுக்கு நீந்திக் கரையேறக் கிடைக்கும் இன்னொரு துரும்பு.

மயிலாடுதுறையில், நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நூறாண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்தப் பள்ளியின் வரலாறு பிரமிப்பானது. எழுத்தாளர்கள் கல்கி, துமிலன், சா.கந்தசாமி, தி.மு.க. தலைவர் பேராசிரியர் அன்பழகன், இன்னும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகள் பலர் படித்த பள்ளி இது என்று அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நூலகம் இல்லையென்று தெரிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இருநூறு கோடி ரூபாயில் ஒரு கனவு நூலகத்தை, சென்னையில் அமைக்கிறோம். இருநூறு ஊர்களில், இரண்டாயிரம் பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. அல்லது இருந்தும் இல்லாத நிலை. மயிலாடுதுறை பள்ளியில் ஆயிரக் கணக்கில் நூல்கள் உள்ளன. ஆனால் நூலகர் பதவிக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. பள்ளிகளில் காவலர் (வாட்ச்மேன்), துப்புரவுப் பணியாளர் பதவிகளெல்லாம் கூட அரசால் நியமிக்கப்படாத நிலைதான் பல பள்ளிகளில் இருக்கின்றன. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தொகுப்பு ஊதியத்தில் சிலரை ஒரு சில ஊர்களில் நியமிக்கிறார்கள்.

ஒவ்வொரு பயணமும் நம் சூழல் எவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கூடவே அதையெல்லாம் தாண்டி எழுந்து வருவதற்கான துடிப்போடும் ஆர்வத்தோடும் தேடலோடும் இன்னொரு தலைமுறை உருவாகிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பையும் இந்தப் பயணங்கள் எனக்குத் தருகின்றன.

முசிறியில் மாணவர் பயிலரங்கம் முடிவில் அன்றைய அனுபவத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டதும் அலை அலையாக எழுந்து வந்து முதல் முறை மைக் முன்னால் பேசிய அத்தனை முகங்களும் குரல்களும் மறக்க முடியாதவை.

Thursday, November 17, 2011

Why this kolai veri di - Lyrics

So Finally Dhanush has Written an English Song





Yo Boys, I am singing Song,
Soup Song..
Flop Song..

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
rhythm Correct
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

Maintain Plz
why this கொலை வெறி கொலை வெறி கொலை .. டீ

Distanlce-u moon-u moon-u
moon-u Color-u White-u
White-u background night-u
night-u color-u black-u

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

White skin-u girl-u girl-u , girl-u Heart-u black-u
Eyes-u Eyes-u meet-u meet-u,
my future dark-u.


why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

மாமா notes எடுத்துக்கோ,
அப்படியே கையில SAX எடுத்துக்கோ

பம்ப்பாம்பஐ பம்ப்பாம்பா பம்ப்பாம்பா பபபபா
சரியா வாசி
அஹ்ஹஹஹ்ஹஹ, சூப்பர் மாமா ரெடி?

ஒன் டூஉ த்ரீஈ ஃபோர்ர்...

வா. Whatஅ change over மாமு.

ok மாமா, now tune change-U,

கையில glass-u,
Only English-u?

Handல Glass-u, glass-ல Scotch-u, eyes-u f-ullஆ tear-u,
Empty Life-u, girl-u come-u, life-u reverse gear-u,
Love-u Love-u, oh my Love-u, You showed me bouv-u,
Cow-u cow-u, holy Cow-u, i want to hear now-u,
God I am dying now-u, she is happy how-u?
This Song-u for Soup boys-u,
we dont have choice-u

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

ம்ம்ம்திங்காக்க்
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

Tuesday, November 15, 2011

வாழ்த்துகளா? வாழ்த்துக்களா?

இதுவும் திரும்பத் திரும்ப வர ஒரு கேள்வி.  வாழ்த்துக்கள் என்பது சரி இல்லை.

 வாழ்த்துகள் என்பதுதான் சரி.

அதே மாதிரிதான் எழுத்துகள், சொத்துகள், முத்துகள் என்று சொல்லறதுதான் சரி. இதுக்கு என்ன ரூல் இருக்குன்னு சிலர் கேட்கலாம். இன்னும் சிலர் வந்து நீ எழுதின கொத்தனார் நோட்ஸ் படிச்சேன். அதுல கூட வன்தொடர்க் குற்றியலுகரம் வந்தா வலி மிகும்ன்னு இருக்கே. பாட்டுப் பாடு, தேக்குப் பலகைன்னு சொல்லிக் குடுத்துட்டு இப்போ வாழ்த்துக்கள்ன்னு மாத்திச் சொல்லலாமான்னு கேட்கறாங்க.


ராசாக்களா, நீங்க அம்புட்டு தூரம் நோட்ஸ் படிச்சு இருக்கீங்கன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா அதே நோட்ஸ்ல நான் இந்த வாழ்த்து மேட்டரும் சொல்லி இருக்கேனே. சரியாச் சொல்லணும்ன்னா அந்த வன்தொடர்க் குற்றியலுகரம் ரூல்தான் இங்கவும் மேட்டர். புணர்ச்சி விதிகள்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா ரெண்டு தனித் தனி வார்த்தைகள் புணரும் பொழுதுதான் அந்த விதிகள் சரியா வரும்.

அப்போ எழுத்து + கள், இதை எடுத்துக்கிட்டோம்ன்னா எழுத்துக்கள் அப்படின்னு வரும். இதுக்கு அர்த்தம் என்ன? கள் போன்ற எழுத்துன்னு அர்த்தம். இல்லையா? ஆனா ஒன்றுக்கு மேற்பட்டன்னு சொல்ல வரும் பொழுது பன்மை விகுதியா கள் அப்படின்னு சேர்க்கறோம். இது விகுதி. இது தனியான சொல் இல்லை. இதைச் சேர்க்கும் பொழுது நம்ம புணர்ச்சி விதிகள் வேலைக்காகாது. பன்மை விகுதியா கள் சேரும் பொழுது வலி மிகுமா மிகாதான்னு விதிமுறைகள் எதுவும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. ஆனா அர்த்தம் ஆகுது அனர்த்தம் ஆகுதான்னு பார்த்து போடச் சொல்லி இருக்காங்க.

கல்கியின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும்.

கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.

நாம முன்னாடி பார்த்தா மாதிரி, கள் போன்ற எழுத்து என்பதைக் குறிக்கும் எழுத்து+கள் என எழுதினால் அது எழுத்துக்கள் அப்படின்னு புணரும். அதனால ரெண்டாவது வரியோட பொருள் என்ன ஆகுதுன்னா கல்கியின் எழுத்து கள் போன்றது. அது எனக்குப் பிடிக்கும்ன்னு ஆகுது. நீங்க அதைத்தான் சொல்ல வந்தா எழுத்துக்கள்ன்னு போடுங்க. இல்லையா எழுத்துகள்தான் சரி.

இனிப்புகள் எல்லாருக்கும் தரலாம் ஆனா இனிப்புக்கள் எல்லாருக்கும் தரலாமா? த்ரக்கூடாதுன்னு சட்டமே இருக்குய்யா!

அதே மாதிரி ஒருத்தருக்கு பிறந்த நாள் விருந்துன்னு அம்சமா சியர்ஸ் சொன்னா அது வாழ்த்துக்கள். மனம் நிறைய வாழ்த்தினா அது வாழ்த்துகள்தான்.

முத்து, சொத்து, வித்து - இதை எல்லாம் என்ன சொல்லணும்? இருக்கிறதை எல்லாம் வித்து’க்’கள் வாங்கினா என் சொத்து’க்’கள், அதுவும் முத்து’க்’கள்ன்னு வேணா சொல்லலாம். பன்மையைக் குறிக்க சொல்லணும்னா முத்துகள் சொத்துகள் வித்துகள்தான். முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் அப்படின்னு கவிஞர் ஒருத்தர் எழுதி இருக்காரேன்னு கேட்டா அது சந்தத்துக்கு எழுதறது. இன்னும் சிலர் கூட இந்த மாதிரி பன்மை விகுதி சேர்க்கும் பொழுது வலி மிகுந்து எழுதி இருப்பாங்க.

இதுக்கு தனியா விதிமுறைகள் ஒண்ணும் இல்லை. அதனால நான் இப்படித்தான் எழுதுவேன்னு சொன்னா ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. ஆனா எழுதினா அனர்த்தம் வரக் கூடாதுன்னு பார்த்துக்கணும். அவ்வளவுதான்

Copied From இலவசம்

Thursday, November 10, 2011

கேரளாவையே அதிர வைத்திருக்கும் சந்தோஷ் பண்டிட்

ஒருத்தரு தன்னோட படத்துல வர்ற 3 பாட்டுக்களை Youtubeலயே வெளியிடறாரு. hits நிறைய வந்திருது, அதிகமில்லைங்க 5 லட்சம் hitsதான். ஆச்சர்யமா இருக்கா? அப்படியான்னு, அடுத்து இன்னும் 3 பாட்டுக்களை வெளியிட்டாரு, hits எகிர ஆரம்பிச்சிருச்சு. மக்களோட எதிர்பார்ப்பும் அதிமாயிருச்சு.  கடைசியா 2 பாட்டுக்கள், அப்புறம் Trailer. பட்டை லவங்கம் எல்லாம் சேர்த்து கெளப்பிருச்சு பாட்டுக்கள். Fans Clum அங்காங்கே முளைக்க வேற ஆரம்பிச்சிருச்சு.  இப்படி Youtubeஆலயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின படம் கிருஷ்ணனும் ராதையும். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்னமேயே.

சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுக்களிலும், trailerலும் கேட்குறீங்களா. நீங்களே பார்த்துக்குங்க.

இப்பொழுது கேரளாவில் ரிங் டோனாக வலம் வரும் பாடல் இது



படத்தின் Trailer





நம்மூர் அஷ்டாவதானி டீ.ஆர் எல்லாம் தூரமா போய் நிக்கச் சொல்லுங்க. படத்துல இவரோட பங்களிப்பு என்னென்னு பாருங்க.

  • பாடல்கள்
  • இசை
  • சண்டைப் பயிற்சி
  • கலை
  • படத்தொகுப்பு
  • பிண்ணனி இசை
  • Grapics
  • Effects
  • பாடியது
  • கதை
  • வசனம்
  • திரைக்கதை
  • உடைகள்
  • Title Graphics
  • Pro. Desgining
  • இயக்குனர்
  • தயாரிப்பு.
அதாவது எல்லாம் இவரே.  குறும்படத்துல நாமளே எல்லாம் பண்ணிக்கிறா மாதிரி.   சும்மா இல்லீங்க, படத்துல 8 பாட்டுக்கள் பாஸூ.   இந்தப் பாட்டையும், trailerஐயும் பார்த்துட்டு நம்மூர் சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார் மாதிரிதாங்கன்னு சொல்லிடாதீங்க. விவரமானா ஆளு இவரு.

தீபாவளிக்கு தமிழ் படங்கள் (வேலாயுதம், 7ம் அறிவு) வெளியாகுதுங்கிறதனால மலையாளப் படங்கள் எதுவுமே வெளியாகலை. அந்தளவுக்கு நம்ம படங்களைப் பார்த்து பயந்து போய் இருக்காங்க, கேரளத்து அச்சன்கள். ஆனா துணிஞ்சு படத்தை வெளியிட்டாரு சந்தோஷ் பண்டிட். முதல்ல எர்ணாகுளத்துல 3 திரையரங்கத்துல வெளியாச்சு படம், எல்லாக்காட்சிகளும் ஹவுஸ் ஃபுல். உடனடியா இன்னும் ப்ரிண்ட் போட்டு 12 திரையரங்கத்துல வெளியிட்டாங்க. எல்லா திரையரங்கத்துலேயும் ஹவுஸ் ஃபுல்.


மண்டை காய்ஞ்சு போயிட்டாங்க கேரள திரையுலக மக்கள். உடனடியா, ஒரு விவாதம் ஏற்பாடு பண்ணினாங்க, அதுல சந்தோசும் பங்கேற்க, காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுத்துட்டாங்க மக்களும், திரையுலக மக்களும். Negative Promotion அப்படின்னாங்க, லூஸுத்தனமுன்னு கூட சொன்னாங்க. அப்போ சந்தோஷ் சொன்னதுதான் எல்லாருக்குமே அதிர்ச்சி. அதாவது ”நான் கேரளத்து சூப்பர் ஸ்டாரானது புடிக்காம பொறாமையில் பேசுறாங்க” அப்படின்னு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாரு. கஷ்ட காலம் வரும் போது ஆண்டவன் அவதரிப்பான், அப்படி அவதரிச்சவன்தான் இந்த சந்தோஷ் கூட சொன்னாங்க, அதாவது கிண்டலா.

அந்த விவாதத்தின் காணொளிகள்






மலையாள சினிமாவே நொடிஞ்சி போயிருக்கிற இந்த நேரத்துல, இப்படி ஒரு மலையாளப் படம் வெற்றிகரமா ஓடுறதை பார்த்துட்டு, திரையுலக ஜாம்பவானான மது,  ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி ஒரு விருதும் குடுத்தாரு. வாய்பிளந்துட்டாங்க கேரளா மக்கள். அதன் காணொளி இதோ.



இதே நிகழ்ச்சியில சந்தோஷ் பண்டிட் சொன்னது இது ”மக்கள் ISD call போட்டு கூப்பிட்டு திட்டுறாங்க. அதாவது 3 நிமிசம் முதல் 15 நிமிசம் வரைக்கும் திட்டுறாங்க. ஆனா, நானா எந்த callயும் cut பண்றது இல்லை. அவுங்களாத்தான் cut பண்ணிட்டுப் போறாங்க. இது எல்லாம் என்னோட வெற்றி” அப்படின்னும் நேரடியாவே சொல்லிட்டாரு. படத்தோட மொத்த செலவு 5 லட்சம், வசூல் எவ்ளோ ஆச்சு தெரியுங்களா? மனசை திடப்படுத்திக்குங்க மக்களே. ஒரு கோடியைத் தாண்டிருச்சாம். அடுத்தப் படத்திற்கான ஆங்கிலப் பாட்டும் இப்போ hit. இதுக்கும் இவரு போற இடமெல்லாம் செம கூட்டமா வந்து திட்டிட்டுப் போறாங்க.

கேரளா மக்கள் எல்லாம் இவரை கேணைன்னு சொல்லிகிட்டே படம் பார்க்க, இப்போ இவர் கோடீஸ்வரர் ஆகிட்டாரு. இப்போ சொல்லுங்க பாஸூ, யாரு கேணைன்னு? இதுக்கும் இவர் எந்த promotionக்குன்னு எந்தச் செலவும் பண்ணலை. எல்லாம் Youtubeல பண்ணின promotionதான்.

கேரளாவின் talk of the Townஆ,இல்லே இல்லே talk of the Stateஆ மாறியப்போயிட்டாரு இந்த கேரளத்து சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட்.  படம் வெளியானதுல இருந்து செய்திகள்,  மக்கள் பார்த்தா பேசிக்கிறது, பதிவுகள் எல்லாமே சந்தோஷ் பண்டிட்தான்.

என்ன கொடுமைன்னா, இனிமே இது மாதிரி எத்தனை லூஸுங்க இந்த மாதிரி கெளம்பி வரப்போறாங்களோ தெரியலை. ஆனாலும், கேரளாவுக்கு வந்த இந்த நிலைமை வந்திருக்கூடாதுடா குருவாயூரப்பா.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)