இதுலயும் ஒரு சைவ டிவிட்டர் வந்து - ‘ 1000 மீன்களை கொல்றாஙகளே, ரெண்டு மனுச உசுரு போனா என்ன?’ அப்படின்னு கேட்டாரு. மயிறு, தமிழனை கொல்றவன் தமிழ்ந்தாண்டாங்கிற உண்மையை நிரூப்பிச்சாரு. சரி, புல்லுருவிங்க இல்லாம தமிழ்நாடு இருக்குமா? எட்டப்பன் தமிழந்தானே.
என்னமோங்க trend வந்திருச்சு. மூணு நாளா காப்பாத்திட்டே வரோம். எவ்ளோ நாள்/நேரம் இன்னும் இருக்கும்னு தெரியல. இதனால என்னத்தை பெறுவோம்னும் தெரியல. ஆனா கொஞ்சம் மக்களுக்கு நம்ம கஷ்டத்தை தெரிவிச்சாச்சு. இதுதான் நம்மாள செய்ய முடியுதுன்னு கவலைப்படாதீங்க. நாம் எறும்பா இருப்போம், அம்மியை கொஞ்சம் நகர்த்தி வெச்சாலும் சந்தோசம்தானே. ட்விட்டர்களின் சத்தம் விகடன் வரை கேட்டிருக்கு. சில தமிழ் பிரபலங்கள் ஆரம்பத்துலேயே குரல் குடுக்க மறுத்தாங்க, இன்னமும்தான். பழைய வன்மம் கூட காரணமா இருக்கலாம். 2006லே இருந்தே இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யுது. எல்லா செய்தி நிறுவங்களும் இதை கவனத்துக்கு எடுத்துகிட்டு ஏதாவது செஞ்சா கொஞ்சமாவது நல்லது நடக்கும்.
ஏதாவது செய்யலாமே பாஸ், கணினிக்கு முன்னாடிதானே. வாங்க. ஆதரவு தாங்க.
இணையத்தில் இணையுங்கள் http://www.savetnfisherman.org/