000000000000000000000000000000000
ஒன்னுமே இல்லீங்க. வேலை வெட்டி இல்லாம நெறைய நேரம் இருக்கோம், எத்தையாவது படிக்கலைன்னா மண்டை வெடிச்சுரும் அப்படிங்கிற ஆளு நான். அதான் எழுதறது, எப்பவாவது.
000000000000000000000000000000000
கிடைத்தது:
நண்பர்கள்: நெறைய. நெறையன்னா நெறயவேதான். இப்போ இருக்கிற எடத்துல இருக்கிற எல்லாம் நண்பர்களுமே(90%) பதிவு/ட்விட்டர்கள் வட்டம் சேர்ந்தவங்கதான். ஒலகத்துல கால எங்கே வெச்சாலும் முதல்ல அந்த ஊர் பதிவர்ங்கதான் ஞாபகத்துக்கு வருவாங்கன்னா பார்த்துக்குங்களேன்.
எந்த அளவுக்கு இந்த நட்புகளை நம்பறீங்க?
எல்லாருமே நண்பர்கள்தான். ஆனா என்னோட நெருங்கிய வட்டத்துக்குள்ள வந்தவங்க ரொம்பச் சிலரே, மத்தவங்க எல்லாம் மூக்கு வரைக்கும்தான். சுருங்கச் சொல்லனும்னா நேருல பார்க்கிற வரைக்கும் யாரையுமே நான் நம்பறது இல்லே. பதிவுகள்ல நான் பின்னூட்டம் போடறதை விட அலைபேசியில பேசினது நிறைய இருக்கும். அதனாலயே பதிவுக்கு அப்பால அந்தப் பதிவர்களின் நெருக்கம் ரொம்ப ஆகிருச்சு. இதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா நம்ம ’கருப்புத் தளபதி’ நசரேயனைச் சொல்லலாம், அப்புறமா ட்விட்டர் வகிமாவைச் சொல்லலாம். அட சொல்ல மறந்துட்டேன், இப்போ நான் வேலையே பதிவுலகத்தால கிடைச்சதுதான். அப்புறம் நட்புகளைத் தாண்டி சங்கம் மக்கள், அதெல்லாம் நெருக்கம், நெருக்கம் ரொம்ப, குடும்ப பிரச்சினைகூட பேசுற அளவுக்கு. சங்கம் மக்கள் நட்பு வளையத்துல வர மாட்டாங்க, அவுங்க அதுக்கு மேல.
இந்தியா/சிங்கை சிலர்கிட்ட நல்ல நண்பனா இருக்கேன், சிலர் எனக்கு நல்ல நண்பர்களா இருக்காங்க. அதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா மாம்ஸ் பாலபாரதி, ’தடாலடி’கெளதம், எம் எம் அப்துல்லா, ’பொதிகைச் சாரல்’ ஜே கே, தேவ், கைப்பு, சிபி, கப்பி, தஞ்சாவூரான், கார்க்கி, ஜிரா, இளவஞ்சி, கொங்கு ராசா, சந்தோஷ், நந்து அப்பா(இந்த மனுசன் இந்த லிஸ்டலையே வரக்கூடாது, இருந்தாலும் 4 பதிவு போட்டிருக்காரேன்னு சேர்த்திருக்கேன்),வால்பையன்,T.V.ராதாகிருஷ்ணன் ஐயா, கோவி, குழலி, செல்லா, செந்தழல் ரவி(இவன்(ர்) எந்த ஊர்ல இருக்கா(ர்)ன்னே தெரியல, அப்படி பறக்கிறான்(ர்)), ஜீவ்ஸ், ஜி,RaamCM
ஐரோப்பாவுல ’ஓமப்பொடி’சுதர்சன், டுபுக்கு, வினையூக்கி
அமீரகத்துல ஆயில்யன், பினாத்தல், புலி(சூடான்),அபி அப்பா,சென்ஷி.
புதரகத்துல பாஸ்டன் ஸ்ரீராம்/பாலா,வகிமா கேங்(வட கிழக்கு மாஃபியா), KRS, வெட்டிப்பயல், என்னைக்குமே மதிக்கும் சத்யராஜ்குமார், பழமைப்பேசி, வழிப்போக்கன் - யோகேஷ், நசரேயன், மருதநாயகம், ச்சின்னப்பையன், சீமாச்சு, மோகன் கந்தசாமி, சங்கரபாண்டி, தமிழ் சசி, சொந்தக்கார சுகந்தி, வயசானாலும் இளமையா இருக்கிற லாஸ் ஏஞ்சல்ஸ் ‘ராம்’,Udhaykumar.
ஈழத்து பகீ, கானா பிரபா(கானாவை சந்திக்கும் நாளை எதிர்பார்த்து இருக்கேன். சந்திச்சதும் பாட்டெல்லாம் சுட்டுட்டு வரனும்)
இவுங்ககிட்ட எல்லாம் வாங்கப் பழகலாம்னு கூப்பிட்டு பேசலாம்னு நினைப்பேன், ஏதோ காரணத்தினால முடியல, இனிமே முடியாமலும் போகலாம் - செல்வராஜ், லக்கி, அதிசா, முரளிகண்ணன், நர்சிம், பரிசல்காரன், வெயிலான், ஜாக்கி சேகர், தாமிரா(ஆதி),ஈரோடு கதிர்(இவரை இங்கே வெச்சிருக்கிறது சரியான்னு தெரியல, ஆனாலும் சந்திச்சக்கனும்),சஞ்சய் காந்தி, அண்ணாச்சி ஆசிஃப்,குசும்பன்,செல்வேந்திரன், Badri, காசி.
இசையை பத்தி போட்ட பதிவுக்கு திரையிசை நண்பர்கள் கிட்ட வாங்கி கட்டினது(ஸ்பெசல்)
000000000000000000000000000000000
எதுக்கு இத்தனைப் பேர் இங்கே?
அட, இவுங்க ஒவ்வொருத்தரும் ஒரு பின்னூட்டமாவதா போடமாட்டாங்களான்னு ஒரு நப்பாசைதான்.
000000000000000000000000000000000
பெண் நட்புகள் நிறைய இருக்குன்னு சொல்றாங்களே, உண்மையா?
பொய். கவிதாயினி காயத்திரி, மை ஃபிரண்டு, அனுசுயா, இம்சை அரசி இப்படி வெகுசிலர் கிட்ட மட்டுமே பேசி இருக்கேன். மீதி எல்லாம் அரட்டையோட சரி. மேல சொன்ன நாலு பேருமே, என் குடும்பத்துல பொறக்கலையேன்னு கோவப்படுற அளவுக்கு பாசம் அதிகம். இவுங்க எல்லாம் உடன் பிறவா சகோதரிகள் கேட்டகரியில வந்துருவாங்க(செலவு மட்டும் நிறைய வெக்க மாட்டாங்க, ரொம்ப நல்ல புள்ளைங்க. ஆமா இவுங்க எல்லாம் எங்கே இருக்காங்க?). மத்தபடி பெண்களுக்கு பதிவுலகம் கஷ்டத்தைதான் தருது, பசங்கதான் குரூப்பா சேர்ந்து சுத்தறதுன்னு நல்லா இருக்காங்க. துளசி டீச்சர், கண்மணி அக்கா, பத்மா, பொன்ஸ், விக்னேஷ்வரி, சந்திரவதனா,சின்ன அம்மிணி, ramachandranusha(உஷா), இவுங்க மேல எல்லாம் நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு.
000000000000000000000000000000000
நேரம் எப்படி கிடைக்குது?
அலுவலகத்துல ஜல்லியடிச்சா பரவாயில்லைங்க, அதுவே வீட்டுக்குப் போவுதும்தான் சிக்கலே. அடி, உதை, கிள்ளு, மிதி இப்படி நிறைய வாங்கியிருக்கேன். அதனால வீட்டுல இப்போவெல்லாம் பதிவு படிக்கிறதே இல்லே.ஒன்லி ஆபிஸ், அங்கே அதுதானே வேலை.
000000000000000000000000000000000
மூக்குடைப்பட்டது?
வேற என்ன ஒரு முறை அவார்ட் தரேன்னு சொல்லப்போயி, தருமத்துக்கு வாங்கி கட்டினேன். மோகன் தாஸ்கிட்ட அதே சமயத்துல வேற காரணத்துக்காக பொதுவுல மன்னிப்பும் கேட்டேன், அது ஒன்னுதான்னு நினைக்கிறேன். சில நேரங்கள்ல நாட்டாமை பண்ணப்போயி சொம்பு நசுங்கனதும் உண்டு, வெளியே நம்ம பேரு வர்றதில்லங்கிறதால அது எல்லாம் மூக்குடைஞ்சதுல வராதே. அப்புறம் BlogOGraphy ரெண்டே ரெண்டு பதிவுகள்தாங்க போட்டேன் ஒவ்வொரு பதிவும் பதிவுலகத்தை நாறடிச்சுருச்சு. தமிழ்மணத்துல சூடான இடுகையெல்லாம் தூக்க வெச்சிருச்சு, அப்படி ஒரு பவர் அதுக்கு.
000000000000000000000000000000000
காசு சம்பாரிச்சது உண்டா?
ஹே ஹே, நிறைய செலவு பண்ணினது உண்டு. சம்பாரிச்சதும் உண்டு, இன்னும் வந்துட்டே இருக்கு அது பதிவுலகம் சார்ந்த தொழில்முறை. பதிவுலகத்தாலும் சம்பாரிக்க முடியும் :)
000000000000000000000000000000000
டிஸ்கி: சிலர் பேரை எழுதாம விட்டுருப்பேன், அவுஙக எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க, ஏன்னா நீங்க இப்போ தொடர்பு எல்லைக்கு அப்பால இருக்கீங்க, நெஜமாலுமே சிலரை மறந்திருப்பேன், அவுங்க என்னை மன்னிச்சிருங்க, பின்னூட்டத்துல என்னை திட்டிருங்க(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)உதவி செஞ்ச எல்லாருக்கும் நன்றி, ஏன்னா அத்தனை உதவிகள் பதிவுலகத்தால கிடைச்சிருக்கு
000000000000000000000000000000000
கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதையிது பதிவுலகத்துக்கு டேப்பரா ஒத்துவரும்.
கொக்கின் பெயர் கொக்கு
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.
முதல் பாராவுக்கு பதில்:தமிழ்ப் பதிவுலத்துல நான் தடுக்கி வுழுந்த நாள் ஆகஸ்டு- 24-2005, அதாவது ஆறாவது வருசமாம் இது. இனிமேலாவது நல்ல, நல்ல பதிவா எழுதலாம்னு ஆசைப்படறேன் (வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்).