காதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும். அப்புறம் அதுவே நாசமாப் போயிரும், அது வேற கதை, விடுங்க விஷயத்துக்கு வருவோம். காதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும் அப்போதாங்க "வானம், நிலா, காத்து,மனசு" அப்படின்னெல்லாம் கவிதை எழுத வரும்.
ஒத்த வரியில சொல்றதுன்னா அழகு மனசுலதாங்க இருக்கு.
மனசு சந்தோசமா இருந்தா எல்லாமே
அழகுதாங்க.
இதோட முடிச்சுககிலாந்தான். ஆனா அப்படி முடிச்சுட்டா எப்படின்னு? யாராவது கேள்வி கேட்டுட்டா? நமக்குதான் கேள்வி கேக்குறது புடிக்குமே, கேட்குறது நாமா இருந்தா மட்டும்.
இந்த அழக( பதிவைத்தான் ஆனந்த விகடன்லயா படிக்க போறாங்க, எல்லாம் நம்ம பதிவர்கள்தான். அதனால பதிவுலகில நாங்கண்ட அழகை மட்டுமே சொல்லப் போறேன். மொதல்ல நம்மள இந்த பதிவுக்கு அழகா இழுத்துவிட்ட அனுசுயாக்கிட்டே இருந்தே ஆரம்பிக்கிறேங்க
- அனுவின் மலர்கள் அழகு,
- ராசாவின் வென்னிலா கேக் அழகு,
- வாத்தியாரின் வளர்சிதைமாற்றம் அழகு,
- கொறிக்கக் கொடுத்த ஓமப்பொடி அழகு,
- மதியின் தமிழ் அழகு,
- ஜி.ராவின் சொல்வன்மை அழகு,
- ராமின் கைப்புள்ளைத்தனம் அழகு,
- கைப்புள்ளையின் குயிஜு அழகு,
- தேவ் செதுக்கிய ரஞ்சனா அழகு,
- கெளதமின் தடாலடி அழகு,
- பினாத்தலாரின் கனவில் வந்த தமிழ்மணம் அழகு,
- பிரியனின் அருகில் இல்லா பொழுதுகள் அழகு,
- அருட்பெருங்கோவின் கவிதைகள் எல்லாமே அழகு,
- நவீன் பிரகாஷின் காதல் மோகம் கொள்ளை அழகு,
- சிபியின் கலாய்த்தல் அழகு,
- போலியின் தொழில்நுட்பம் அழகு,
- பாலாபாரதியின் பதிவர் கூட்டம் அழகு,
- இட்லிவடை முந்தித் தந்த, பதிவர் கூட்டம் புகைப்படம் அழகு,
- விடாது கருப்பின் பெரியார் அழகு,
- பொன்ஸ்'ன் சந்திரா அத்தை அழகு,
- லிவிங் ஸ்மைலின் தீரம் அழகு,
- இராமநாதன் காட்டிய பூச்சி அழகு,
- கொத்ஸின் பின்னூட்டம் அழகு,
- கானா பிரபாவின் புன்னகை அழகு,
- துளசி அக்காவின் தில்லி அழகு,
- பொட்டீ கடையின் டவுசர் அழகு,
- லக்கியின் கலைஞர் அழகு,
- பங்காளி சந்தோஷின் பார் டான்ஸர் அழகு,
- டோண்டுவின் போண்டா அழகு,
- பாஸ்டன் பாலாவின் சுட்டிகள் அழகு,
- TBR Joseph திரும்பிப் பார்த்தால் அழகு,
- கோவியின் காலங்கள் அழகு,
- செந்தழலின் வேலை தேடல் அழகு,
- வெட்டியின் தூறல் அழகு,
- நாகை சிவாவின் கொசு அழகு,
- தேசிகனின் அழகே அழகு,
- நாட்டாமையின் பிரியாணி அழகு,
- சவுண்ட் பார்ட்டியின் சேட்டன் அழகு,
- மா.சிவக்குமாரின் நேர்த்தி அழகு,
- ஜெசிலாவின் குட்டிக் கவிதைகள் அழகு,
- கால்காரி நீமோ அழகு,
- உஷாவின் மாயாவும் அழகு,
- சர்வேசனின் வெங்காயம், உருளை, தக்காளி அழகு,
- எஸ்கேவின் மன்னாரு அழகு,
- ஷைலஜாவின் தமிழ் நடை அழகு,
- சிறில் கட்டிய தேன் அழகு,
- முகமூடியின் முள்ளம் பன்றி அழகு,
- நிலாவின் ஆத்தா அழகு,
- சின்னக்குட்டியின் ஓடும் படங்கள் அழகு,
- செல்லாவின் உணர்ச்சி வேகம் அழகு,
- கண்மணியின் அல்வா அழகு,
- இம்சை அரசி சமையல் அரசியானது அழகு,
- கார்த்திக் பிரபுவின் அத்தை பெண்கள் அழகிகள்,
- கப்பி மேய்த்த மாடு அழகு,
- நிலவு நண்பன் தூக்கம் தொலைத்த இரவுகள் அழகு,
- பாண்டி வடித்த ஜொள் அழகு,
- இராம.கியின் செந்தமிழ் அழகு,
- மை ஃபிரண்டின் குழந்தை மனசு அழகு,
- நிவேதாவின் உடைபட மறுத்த பிம்பங்கள் அழகு,
- மயூரேசனின் ஈழத்தமிழரைப் பற்றிய ஒலிப்பதிவு அழகு,
- மோஹன் தாஸ் தோற்ற காதல் அழகு,
- மு.கார்த்திகேயனின் பிச்சைக்காரர் அழகு,
- கீதா சாம்பசிவத்தின் தமிழக சுற்றுலா அழகு,
- ஈழ பாரதியின் போராட்டம் அழகு,
- பத்ரியின் உண்மை அழகு,
- குழலியின் மறுக்கப்பட்ட கதை அழகு,
- KVராஜாவின் கொஸப்பேட்டை அழகு,
- ஆசிப் மீரான் ஆடிய கிரிக்கெட் அழகு,
- தூயா வேண்டிய சிறகுகளும், பெரிய்ய்ய்ய தலைப்புகளும் அழகு,
- KRS'ன் கண்ணன் பாட்டுக்கள் அழகு,
- சுடுவனம் நித்தியா வருடிய நினைவுகள் அழகு,
- வரவனையின் சொந்த செலவில் சூன்யம் அழகு,
- நான் தினமும் உழும் முகுந்தனின் இ-கலைப்பை அழகு,
- கல்யாண் கட்டிய தேன்கூடு அழகு,
- காசி அண்ணன் பரப்பிய தமிழ்மணம் ரொம்ப அழகு,
- கடைசியாக என்னுள் நான் அழகு....
மேற்சொன்ன அனைத்து அழகுகளுமே எதையும் தேடாமல் என்னோட மனசுல இருந்ததுங்க. சிலது விடுபட்டு இருந்தா அடுத்த வாட்டி பார்த்துக்கலாம். அந்தந்த பதிவர்கள் சுட்டிகளை பின்னூட்டத்துல குடுத்தீங்கன்னா நல்லா இருப்பீங்க சாமி.
யாரோ 3 பேரை கூப்பிடனுமாமே அந்த 3 பேர் இவுங்கதான். முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.
1. Bill Gates
2. George W Bush
3. Tony Blair
யாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கனும்னு ஐயன் சொன்னதுங்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை