முதன் முறையாக,
ஒரு பகலின் இருட்டில் நாம்.
கையில் பசி தணிக்க பாப்கார்னும்,
சூடு தணிக்க பெஃப்சியும்.
திரையரங்கின் மூலை சீட் நமக்கு,
தொந்தரவு செய்ய அருகிலும் யாருமில்லை.
பாப்கார்னை மட்டும்
தின்று விட்டு
என்னை பத்திரமாய் வீட்டில் விட்டாய்,
நமக்கு முதல் இருட்டே
பகலாய் போனதே!
==00==
உன் வீட்டில் யாருமில்லை என்று
அழைத்தாய் என்னை,
சினிமாவை போல்- அன்று
மழை இல்லை, மின்னல் இல்லை,
ஏன் இரவாகக் கூட இல்லை,
இடியும் இடிக்கவில்லை,
நானும் பயந்து வந்து
உன்னை கட்டியணைத்துக் கொள்ளவில்லை.
சே,
சினிமாவில் காட்டுவதெல்லாம்
பொய்யென்று நினைத்தேன்
ஆனாலும் சினிமாவில் காட்டாத
காட்சியெல்லாம் அரங்கேறியது,
சீ, சீ!
சினிமா அப்படியொன்றும் பொய் இல்லை!
==00==
உன் முதல் மாத சம்பளம்
ஒரு தோடும், பொட்டும்,
100 ரூபாயும் குடுத்தாய்.
நீ வாங்கிய பைக்கில்
என்னைத்தான் அமர்த்திப்பார்த்தாக
வேண்டும் என்று அடம் உனக்கு.
முக்காடு போட்டபடி உன்னைத் தொடாமல்
சாலையில் ஊர்ந்தபடி நானும், பைக்கும்.
தோடும், பொட்டும், பணமும்
பத்திரமாய் பையில்,
மனம் மட்டும வானத்தில்!
ஒரு தோடும், பொட்டும்,
100 ரூபாயும் குடுத்தாய்.
நீ வாங்கிய பைக்கில்
என்னைத்தான் அமர்த்திப்பார்த்தாக
வேண்டும் என்று அடம் உனக்கு.
முக்காடு போட்டபடி உன்னைத் தொடாமல்
சாலையில் ஊர்ந்தபடி நானும், பைக்கும்.
தோடும், பொட்டும், பணமும்
பத்திரமாய் பையில்,
மனம் மட்டும வானத்தில்!
==00==
டிராபிக் சிக்னல்...
இறுக்கி அணைத்த படி
முன் வண்டியில்
இளம் தம்பதி!
வயிறு எரிந்தது எனக்கு.
சீக்கிரமே,
என்னை கல்யாணம் பண்ணுடா,
ஆயிரம் பேரயாவது
வயிறு எரிய வெக்கிறேன்.
==00==
நீ சிகரெட் பிடிக்கும் போதெல்லாம்பிடிங்கி வைத்துக்கொண்ட சிகரெட்டுகள்
பெட்டி வழிய என் அறையில்.
அவற்றை பிடிக்கவாவது என் அறைக்கு
யாருக்கும் தெரியாமல் வந்து போடா!
==00==
"காதலர் தினத்துக்கு என்ன தருவாய்?"
என்று கேட்டேன்,
"என்னைத்தரவா?" என்றாய்,
எதற்கு? உன்னைக் கொடுத்து
"என்னை எடுத்துக் கொள்வாய்,
அப்படியே கொல்லவும் செய்வாய்.
"அப்போ உன்னை பார்க்க
வர மாட்டேன் என்றாய்".
"பரிமாற்றம், நாளை மட்டும்" என்றேன்,
ஆயிரமாவது தடவையாக.