ராதாமோகனின் 2வது படம் என்கிறதனால் கொஞ்சம் எதிர்பார்ப்போடுதான் படம் பார்க்க போனேன். எடுத்தவுடனே மண்டையில் ஒரு Flash, தெய்வமகன் மாதிரி இருக்கேன்னு நெனச்சேன். அப்புறம்தான் படம் அப்படியில்லை அப்படின்னாரு Director.
சின்ன கதை. அக அழகா? புற அழகா? ஒரு பட்டிமன்றம். அக அழகில் உற்றார், உறவினர்களின் அன்பைப் பெற்ற ஒருவன், புற அழகை பெற முயற்சிக்கும் போது ஏற்படும் குழப்பங்களே படம். சின்ன வயசுல ரவிகிருஷ்ணாவிருக்கு முகத்துல ஒரு தழும்பு(வடு) விழுந்துடுது. கொஞ்சம் பெருசான அப்புறம் (இளமையில) feel ஆகுறார். அதை மறைக்க Plastic Surgery பண்ண முயல, பணம் தேவைப்பட, Part time வேலை பார்க்க, நண்பர்கள், அம்மா, அக்கா வோடு பிரச்சனை, அப்படின்னு போகுது கதை. .....படத்தின் சிறப்பே வித்யசாகரின் இசை.
வித்தியாசமான கதை & திரைகதை, துணிச்சலான முயற்சி. ஆனால் Art Film இல்லை. பொன்னியின் செல்வன் - சிறுகதை