Monday, August 1, 2011

ஈழத் தமிழர்களும் தமிழும்

கேள்வி: உண்மையான தமிழ் எங்கே இருக்கிறது?
பதில்: இந்தியாவிற்கு தெற்கே இருக்கிறது.

இது விகடனில் மதனிடம் கேட்ட கேள்விக்கு வந்த பதில்.

2003ல்- லண்டனில், hounslow West- Best Food மளிகை கடைக்குள்ள(அப்படின்னு நினைக்கிறேன், சரியா?) ஒரு video library இருக்கும், அங்கேதான் படங்களை வாடகைக்கு வாங்குறது வழக்கம். அங்கே ஒரு அண்ணாச்சி இருப்பாரு. படம் கேட்டா “குறுந்தகடுல வேணுமா, பெருந்தகடுல வேணுமா”?ன்னு கேட்பாரு. நானும் முதல் நாள் ஏதோ ஒன்னு குடுங்கண்ணே. அப்படின்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் அதென்னண்ணே குறுந்தகடு, பெருந்தகடுன்னு கேட்க குறுந்தகடுன்னா VCD, பெருந்தகடுன்னா DVDன்னாரு. நீங்க தமிழ்நாடு இந்த வார்த்தைகள் எல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னாரு(Blue Rayகு என்ன சொல்லுவாரு இப்போ? நீலகதிர் தகடுன்னா?).



2010ல் Fetna நிகழ்ச்சி, பதின்ம வயதை ஒட்டி 10-15 பேர் ஆட்டம் பாட்டமா ஓடி விளையாடியும், சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தாங்க. யாரு இவுங்கன்னு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அவுங்க எல்லாம் அக்னி இசைக் குழுவினர்னு. கனடாவுல இருந்து வந்தவங்களாம். ஆனா, நிகழ்ச்சி அப்ப, தமிழ்ல பட்டாசா பாடி இசை நிகழ்ச்சி பண்ணினது எனக்கு பெரிய ஆச்சர்யமா இருந்துச்சு. காரணம் நம்ம ஆட்களோட குழந்தைக்கு தமிழ் கண்டிப்பா பேசவே வராது. அப்படி வளர்ப்போம் நாம. கேட்டா ”யதார்த்தம், பொழைக்கனும் இல்லே” அப்படின்னு ஆயிரத்தெட்டு காரணம் சொல்லுவாங்க.



இதே போல பாரீசில், நம்மூர் ரோட்டுக்கடை மாதிரி தோசைக்கல்லை நமக்கு முன்னாடியே வெச்சி, தோசை மாதிரி(crepe) ஒன்னு சுட்டு அதுக்கு மேல சாக்லெட் தூவி குடுப்பாங்க. ஊர் சுத்துனதுல ரெண்டு நாளா சாப்பாடே சாப்பிடலை. pompidou பக்கதுல ஒரு சாப்பாட்டுக்கடை, அங்கே இந்த தோசயை பார்த்த பின்னாடி தோசை சாப்பிட ஆசை வந்திருச்சு. சுடறவரும் நம்மூரு மாதிரி இருந்தாரு. நமக்கு தெரிஞ்ச ஆங்கிலத்துல சாக்லெட் இல்லாம குடுங்கன்னு கேட்டப்ப சொன்னாரு “நானும் தமிழ்தான்”  அப்படின்னு சொல்லி, தோசைய வார்த்து அவருக்காக வெச்சிருந்த குழம்பும் ஊத்தி ஒரு பெரிய விருந்தோம்பலே நடத்தினாரு.  நன்றி அண்ணாச்சி.

இன்னிக்கு வெளிநாடுகள்ல வர்ர முக்கால்வாசி Online FMக்கள் இவுங்களால மட்டுமே நடத்தப்படுது. லங்காஸ்ரீ FMபத்தின சிறப்புப் பதிவை இன்னும் கொஞ்ச நாள்ல போடுறேன்.

இதெல்லாம் நான் சொல்ல காரணம் என்னன்னா உள்நாட்டு போரினால பல நாட்டுக்கு குடிபெயர்ந்தவங்க, இன்னும் ஒரு தலைமுறை தாண்டியும் கொஞ்சம் தமிழை மீதி வெச்சிருக்காங்க. பொதுவா ஒரு தலைமுறைக்கு அப்புறம் தன் மொழி மறந்து எந்த நாட்டுல வாழ்றாங்களோ அந்த நாட்டு மொழியை அடுத்தத் தலைமுறை கத்துகிட்டே ஆகவேண்டிய கட்டாயத்தினால தன்னோட மொழியை மறந்துடுவாங்க. அதுல ஈழத்தமிழர்கள் கொஞ்சம் விதிவிலக்கு. அப்படி ஒரு தமிழார்வம் இந்த ஈழத்தமிழர்களுக்கு உண்டுங்க. இன்னிக்கு உலகலாவிய அளவில் தமிழ் செழித்து(கொஞ்சமாச்சும்) வளருதுன்னா அதுக்கு இவுங்கதான் காரணம். வெளிநாட்டுல நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி பண்றதும் இவுங்க மட்டும்தான். சினிமா மேல இவுங்களுக்கு அதிக ஆர்வம் வரதுக்கும் இதுதான் காரணம்.

ஓப்பீட்டளவுல தமிழ்நாடு வாழ் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழ்நாட்டு தமிழர்களும் இவுங்க பேசுற மாதிரி தமிழை பேசறது கிடையாது. நம்ம அளவுக்கு ”அவுங்க தமிழ் நமக்குப் புரியாது” அப்படின்னு நாம தமிழை சுத்தமா மறக்கவே முயற்சி பண்றோம்.

ஈழத்தமிழர்களில், இந்தத் தலைமுறையும் தமிழை வெளிநாட்டுல காப்பாத்துவாங்களா?

13 comments:

  1. கனகாலமாக பார்த்து கொண்டு வாறன் ..உந்த தமிழரில் அப்படி என்ன பாசம் உங்களுக்கு? பதிவுக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. சின்னகுட்டி யண்ணை, சும்மா சொல்லக்கூடாது? மே18 2010க்கு அப்புறமா இப்பத்தான் ஈழம் பத்தி பதிவு போடுறன். இது ஆந்திராவும் USAம் பதிவப்பவே போடறதா இருந்துச்சு. போர் நடந்தப்ப போடக்கூடாதுன்னு இருந்தேன். இப்பக்கூட போடலைன்னா எப்பத்தான் போட?

    ReplyDelete
  3. SivaDayalan Dayalan Said--> ஐரோப்பாவில் வார இறுதிகளில் தமிழ்பாடசாலைகள் இயங்குது. பாடத்திட்டங்கள் தான் கொஞ்சம் கடுமை. அதுவே பிள்ளைகளின் ஆர்வத்தை குறைக்கின்றது.

    ReplyDelete
  4. @SivaDayalan அமெரிக்காவிலும் கொஞ்சம் பேர் பாடம் நடத்துறாங்க. ஆனா பசங்க விகிதமோ ரொம்ப கம்மி

    ReplyDelete
  5. Blue Ray Disc என்றால் நீலக் கதிர் இறுவெட்டு என்று சொல்லியிருக்கலாம் :) பதிவு நல்லாருக்கு.

    இலங்கையில் தமிழனுக்கும், தமிழுக்குமுரிய அந்தஸ்து வழங்கப்படாததால் போற இடமெல்லாம் தமிழை விடாப்பிடியா வளர்க்கிறம். நேற்று மூன்று தலைமுறையை சேர்ந்த ஈழத்தமிழ் குடும்பம் ஒன்று தமிழில் பேசிக்கொண்டிருக்க என் நண்பர் ஆச்சர்யப்பட்டு என்னை அது பற்றி கேட்ட போது சொன்னது தான் இது. அதற்கு என் நண்பர் சொன்னார், "It's a GOOD obsession" என்று.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இளா,இந்த மாதிரி பேச்சுத் தமிழில் எழுதும் வழக்கத்தை ஒழிப்பதும் தமிழை வளர்ப்பதில் அல்லது நிலை நிறுத்துவதிலாவது பெரும் பயனும் பங்கும் அளிக்கும்..
    :-p

    ReplyDelete
  8. //பேச்சுத் தமிழில் எழுதும் வழக்கத்தை ஒழிப்பதும் தமிழை வளர்ப்பதில் அல்லது நிலை நிறுத்துவதிலாவது //
    பேச்சுத்தமிழல எழுதலைன்னா நிறைய பேர் எழுதறதையே நிறுத்தியிருப்பாங்க. இந்த மாதிரி தமிழ்தான் இன்னும் மக்களை எழுதவும் படிக்கவும் தூண்டும்(ஆங்கிலம் கலக்காமல்)

    ReplyDelete
  9. இளா,

    //பேச்சுத் தமிழில் எழுதும் வழக்கத்தை ஒழிப்பதும் தமிழை வளர்ப்பதில் அல்லது நிலை நிறுத்துவதிலாவது //

    கணக்கு வழக்கில்லாமல், எண்ணிலடங்காமல், மொழியரிஞர்களும், மொழி நீதிபதிகளும், கவிஞர்களும் தமிழ் மொழியில் புதிதாக வார்த்தைகளையும் அதற்கு அர்த்தங்களையும் கண்டுபிடிப்பதில் தமிழர்களின் திறமை யாருக்கும் வராது. ;-)

    ReplyDelete
  10. //புதிதாக வார்த்தைகளையும் அதற்கு அர்த்தங்களையும் கண்டுபிடிப்பதில் ///
    ஆமாங்க. இருக்கிற வார்த்தைக்கு ஆங்கில வார்த்தையில பேசிட்டு புதுசா வர்ற வார்த்தைகளை தமிழ்’படுத்துதல்’ தாங்கலைங்க. Facebook- முகப்புத்தகம், twitter - கீச்சு, இப்படி. ஆனா சுலபம்ங்கிற வார்த்தையை நம்ம மக்கள் "EASY”யா மறந்துட்டாங்க.. நான் சுலபம்னு சொன்னா என்னான்னு கேட்டாரு ஒருத்தரு. எங்கே போயி முட்டிக்க?

    ReplyDelete
  11. Rathi- உண்மையத்தான் சொல்லிருக்காரோ?

    ReplyDelete
  12. இப்போதுதான் பதிவைக் கண்டேன் இணைய வானொலிகள் ஒவ்வொன்றும் தனித்துவமாகப்பணியாற்றி வருகின்றன தமிழில் ஆங்கிலக்கலப்பை வைத்து நிகழ்ச்சி செய்தால் இங்கே அந்த வானொலியை நேயர்கள் ஒதுக்கிவிடுவார்கள்

    ReplyDelete
  13. இளா, அவர் குறுந்தகடு என்று சொன்னது வழக்கத்தில் உள்ளது. அதேபோல் இறுவெட்டு என்பதும் சரியான தமிழே :))

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)