Thursday, April 23, 2009

அமெரிக்கா-1

அமெரிக்கா, பலருக்கு கனவு, சிலருக்கு வெறி. கொல்டி மக்களுக்கோ வாழ்க்கை. இங்கே வந்து 2 வருசம் தான் ஆவுதுங்க.. இந்த ரெண்டும் வருசத்துல என்னத்த தெரிஞ்சிக்கிட்டேனோ அதச் சொல்றேங்க. ஊடால ஊடால நம்ம நாட்டையும் ஒப்பிட்டு சொல்ல வேண்டி இருக்கலாங்க. என்னத்த சொல்ல. மொதல்ல இந்த நாட்டுக்கு வந்தவுடனே எதையுமே வாங்க மாட்டோம். அப்படியே வாங்கினாலும், இந்த ஊர்ல 2 டாலர்னா நம்ம ஊர்ல 100 ரூபாய், இது நூறு ரூபாய் குடுத்து வாங்கனுமான்னு தோணும். ஆனாலும் வாங்காம இருக்க முடியாதுங்களே. இப்படி பணத்தை இந்திய ரூபாய்க்கு கணக்குப் போடறது ஒன்னு இல்லைன்னு ரெண்டு வருசம் இருக்கும். அப்புறம் மாறிபோயிரும்.

பழைய சோத்த வெச்சே பல வருசம் வாழ்க்கைய ஓட்டி இருப்பாங்க. இங்க வந்தவுடனே, சில பேரு விடற பீட்டரு தாங்க முடியாதுங்க. இதுல அம்மணிங்க நம்மள விட சதவீதம் சாஸ்தியாய் இருப்பாங்க. அவுங்களும் அவுங்க உடையும் சீக்கிரமே
மாறிப்போயிரும். இதுல அவுங்களுக்குத்தான் கதவு, சன்னல் எல்லாம் வெச்சு துணி மணிங்க கெடைக்கும். நமக்கு மீறிப்போனா டவுசரும், பேண்டும்தானே.

அட, என்னத்தையோ சொல்ல வந்து எங்கே வந்து இருக்கு பாருங்க,. இங்கன எப்படி வார்றதுன்னு கேட்காதீங்க. சினிமாவுல பார்த்த இடத்தை எல்லாம் நேருல பார்க்கும்போது இருக்க பிரமிப்பு சொல்லி மாளாதுங்க. அது ஊட்டி 7 மைலாவாட்டும், விளக்கு புடிச்சுட்டு நிக்கிற சுதந்திர தேவி சிலையாவட்டும்.

இப்ப இங்க இருக்கிற நெலைமையில எல்லாமே பயமாத்தான் இருக்கு. எப்ப வேலை போவுமோன்னு தொடை நடுங்க வேண்டிகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. அலுவலகத்துக்கு உள்ளே போவும்போது தேய்க்கிற அட்டை மட்டும் வேலை செஞ்சுட்டாவே அன்னிக்கு தப்பிச்சேன்னு இருக்கு. இந்தியாவிலேயும் இதே நிலமைதான். பொட்டி தட்டுற மக்களுக்கு ஏழரை போல. வந்து இறங்கினப்புறம் திருப்பி அனுப்புறாங்க, H1bல இருக்கிறவங்களுக்கு வேலை தர்றது இல்லே, விசா நீட்டிக்கிறது இல்லே இப்படி பல சேதி தெனமும் கேட்டுக்கிட்டே இருக்கோம். கஷ்டம் எல்லா இடத்திலேயும்தாங்க.

சரிங்க, இப்படி பல முகம் கொண்ட அமெரிக்காவப் பத்திதாங்க எழுதலாம்னு இருக்கேன். அட இப்போ அமெரிக்கன்னாவே வட அமெரிக்காதானுங்களே. என்ன நமக்கு தெரிஞ்ச விசயத்தையும் கொஞ்சம் தேடியும்தான் தொடராக்கபோறேன். சின்னப்பையன்னு பெரியவங்க கோச்சுக்காம தப்பை சரியாச் சொல்லுங்க.

கொசுறு: போன வாரம் ஒரு காலை நேரத்துல ”பழைய சோறும், தொட்டுக்க கோங்குரா தொக்கும் சாப்பிட்டேன்“னு சொன்னேன், ரெண்டு பேரு நக்கலா, ”அங்கே எல்லாம் பழைய சோறு சாப்பிடுவாங்களா?”ன்னு கேட்டாங்க, இன்னொருத்தர் “பொய்தானே”ன்னு சொன்னாரு. அது ஏங்க? இங்கே பழைய சோறு திங்கறது அவ்ளோ கஷ்டமா?

7 comments:

  1. ஏனுங்ணா பன்றது?? அம்பானிக்கே 31 பில்லியன் டாலர் நஷ்டமாம்... ஜெர்மனில ஒரு பில்லியன் டாலர் தொழிலதிபர், சமாளிக்க முடியாம தற்கொல பண்ணிக்கிட்டாராம்... இது மாதிரி அவிங்களுக்கே அந்த நெலமைன்னா, நமக்கெல்லாம் சொல்லவா வேணும்?? :((

    ReplyDelete
  2. எங்க ஊட்டுல நானும் என் புள்ளைங்க ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சு பழய சோறு திம்போம். அதுலயும் என் பொண்ணுக்கு ஊறுகா கொஞ்சோண்டு கலந்துவிட்டா சாப்புட்டுக்கிட்டே இருப்பா. :-)

    ReplyDelete
  3. நானும் பழைய சோறு சாப்பிட்டேன் காலேஜ் நாட்களில்.. ரொம்ப பழைய சோறு.. கடல் மண்ணுல புதைச்சு, ...ம்ம்ம் சுண்ட கஞ்சி சோறுடா

    ReplyDelete
  4. //அவிங்களுக்கே அந்த நெலமைன்னா, நமக்கெல்லாம் சொல்லவா வேணும்??//அதானுங்களே ஜி.. வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  5. //சுண்ட கஞ்சி சோறுடா//
    கார்க்கி, இந்தியாவுல இருந்துகிட்டே இத்தனை சலம்பலா? சுண்ட கஞ்சி- நாம இன்னும் குடிச்சதே இல்லீங்க :(. இந்த வார்த்தையே லக்கி பதிவுலதான் தெரிஞ்சுகிட்டேன்.

    ReplyDelete
  6. //
    நமக்கு மீறிப்போனா டவுசரும், பேண்டும்தானே.
    //
    சாயம்போன சட்டையும் கிடைக்கும் :)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)