Thursday, December 20, 2007

சங்கமம்-ஏன் இத்தனை சச்சரவு?

நான் ஆங்கில பதிவுதாங்க மொதல்ல எழுதினேன். அப்போ இருந்த ஒரு கூட்டம் (CAT prep) பண்ணிட்டு இருந்தோம். IIMல சேரனும்னு வெறி. அப்போ தான் பதிவுகள் எங்களுக்கு பழக்கம் ஆச்சு(2003 கடைசியில). எங்களுக்கு நாங்களே படிச்சுக்குவோம். பின்னூட்டம் எல்லாம் அப்போ கிடையாது. HaloScan வந்தப்புறம் பின்னூட்டம் போட வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும் எங்களுக்கு சரியான பதிவர் வட்டம் இல்லே. CATக்கு படிச்சுட்டு இருந்த ஒரு 100 பேரு படிப்போம். அப்புறம் தமிழ்மணம் பார்த்து தமிழ் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் எவனும் படிக்கிறது இல்லே அப்புறம் எதுக்குன்னு ஆங்கிலத்துல எழுதறத விட்டுட்டேன்.


இந்த வருசம் வரைக்கு ஆங்கில பதிவை சீண்டல. இந்த வருசம் ஆகஸ்டு மாசம், சும்மாத்தானே ஆன்சைட்ல இருக்கோம், blogdesam த்தை வாங்கலாமே வாங்கி, தமிழ்மணம் மாதிரியே ஆங்கில பதிவுகளுக்கும் ஒரு இடம் குடுப்போம்னு, காசி அண்ணாக்கு ஒரு மடல் தட்டினேன். அண்ணன் சொன்னாரு "இல்லே இளா, TMIக்கு தமிழ்மணத்தை குடுக்கும் போதே குடுத்துட்டேன், வாக்கு தவற கூடாதுல்ல" அப்படின்னாரு. அண்ணனையும் அவுங்ககிட்ட கேட்டுச் சொல்லுங்கன்னு கேட்டு வற்புறுத்தவும் மனசு இடம் குடுக்கலை. சரி, தமிழ்மணத்தை கேட்கலாம்னா யாருன்னே தெரியல. சரி நாமே ஒன்னு பண்ணிரலாம்னு முடிவு செஞ்சு, ஒத்த ஆளா போராடினேன். இதுல இன்னொரு காமெடி என்னான்னா? System Adminஆ இருக்கிற நான எப்படி ஒரு website பண்ணப்போறேன்னு ஆரம்பிச்சது. சரி படிப்போம்னு, அங்கங்கே இருக்கிற உதவி பக்கத்தையெல்லாம் தேடிப்பிடிச்சு படிச்சு, அங்கங்கே இருக்கிற தானியங்கி இற்றைப்படுத்திற கருவியெல்லாம் ஒன்னு சேத்தி, ஒரு முழு வடிவமா கொண்டு வர 2 மாசம் ஆகிருச்சு. அப்படியே ஓட்ட ஆரம்பிச்சேன்.(Mid of October). அதுபாட்டுக்கு ஓடிட்டு இருந்துச்சு. நவம்பர் கடைசி வரைக்கும் யாருக்கிட்டேயுமே ஒன்னும் சொல்லலை. மக்களா வந்தாங்க, சேர்ந்தாங்க, படிச்சாங்க. அவ்ளோதான். பெரிய எதிர்ப்பார்ப்பும் அதுல எனக்கே அங்கே இல்லே. எங்க மக்களுக்காக ஆரம்பிச்சத்துதானே, விட்டுட்டேன். அப்புறம் தமிழில் இருக்கும் கதை கவிதைகளை ஒரு இடத்துல கொண்டு வரனும் உருவாக்கினதுதான் இப்போ இருக்கிற சங்கமம் பதிவு.

உமர் தம்பி போன்றவங்களுக்கு தமிழ்ப் பதிவுலகத்துல ஒரு இடம் இருக்கு, அதை அங்கீகாரம் பண்ணித் தரணும் அப்படிங்கிறதுதான் என் அடிமனசுல இருந்த எண்ணம். உமர் தம்பி உட்பட 3 பேருக்கு பதிவர்கள் சார்பா பட்டமும், பதிவர்களுக்கு விருதும் தராலாமேனு யோசிச்சேன். ஒரு பதிவரா இதைச் செய்யுறதுல ஏதும் தப்பில்லைன்னு நான் நினனச்சேன். இதையே மையமா வெச்சு NRIக்கள் எல்லாம் சேர்த்து ஒரு துறையில நலிந்த கலைஞருக்கு பொருளுதவி பண்ணலாம்னும் ஒரு யோசனை. அப்போதான் தஞ்சாவூரான் இந்த விஷயத்துக்காக என்னை ஊக்குவிச்சாரு. பதிவர் விருதுக்காக முதல்ல கட்டமா நடுவர் குழுவை சேர்க்க ஆரம்பிச்சேன். இது என்னளவிலும், பிறகு நடுவர் குழுக்களாலேயே மொத்த குழுவாவும் உருவாச்சு. இது நவம்பர் மாசம் கடைசியில நடந்தது. இதுவரைக்கும் தனியாளா இருந்த நான் நடுவர் குழு வந்ததுக்கப்புறம் ஒரு குழுவா ஆகிட்டேன். சரி விருது நடத்த இடம்?

இருக்கவே இருக்கு Blogkut, விருதுக்காக ஒரு இடம் போடுவோம்னு ஒரு தனி Sub-D0main தயார் பண்ணினேன். சில சட்டம் திட்டம் எல்லாம் நடுவர் குழுவுல இருந்து பேசி முடிவுக்கு வந்தோம். ஒத்த வரியில விருதுக்கான முதல்ல அறிவிப்பும் செஞ்சேன். இந்த விருது சச்சரவு வர வரைக்கும் பேரெல்லாம் வெக்கலை. அடுத்த 12 மணிநேரத்துல தமிழ்மணத்துல இருந்து தமிழ்மணம் விருதுகள்னு அறிவிப்பு. சரி, ஆட்டத்தை கலைச்சரலாம்னா நடுவர்குழுவுக்கு என்ன பதில் சொல்றது. சரி நடக்கிறது நடக்கட்டும்னு விட்டுட்டேன். அந்தச் சமயத்துல ஒரு லோகோவோ, ஒரு பேரோ கூட சங்கமத்துக்கு இல்லே.

பேரில்லாத அந்த So called திரட்டி அப்போ ரெண்டே ரெண்டு பதிவைத்தான் திரட்டிக்கிட்டு இருந்துச்சு. இன்னும் பின்னூட்டம் திரட்டல்ல அந்த ரெண்டு பதிவுதான் இருக்கு. அடுத்த நாள் மக்களே அந்தப் பதிவை வெச்சே திரட்டிக்கு பின்னூட்டமாவும், பதிவாவும் பேர் வெக்க வேற வழியில்லாம சங்கமம்னே Logo போட்டுவிட்டு விதிமுறைகளை வெளியிட்டேன். அங்கே ஆரம்பிச்சதுய்யா ஆட்டம். இருவருமே விருதுகள் அறிவித்து ஏன் பதிவர்களை குழப்பனும்னு தமிழ்மணத்துக்கு ஒரு மடலையும் போட்டுட்டு சூடாகிற பதிவை எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டேன். தமிழ்ல அசைக்க முடியாத இடத்துல இருக்கிற தமிழ்மணத்து மேலையும், காசி அண்ணா மேலையும் எனக்கு மதிப்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு.

அவ்ளோதாங்க நடந்த விஷயம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதிட்டேன். மீதி எல்லாம்தான் உங்களுக்கே தெரியுமே.

14 comments:

  1. சச்சரவு இல்லாத சங்கமமா ?
    ஆரம்பமே அமர்க்களம் போங்கள். எந்த அளவுக்கு ப்ரச்சனை உள்ளதோ அந்த அளவுக்கு சிறப்பாக சங்கமம் விருதும் இருக்கும்.

    சும்மாவே சங்கமத்துக்கு மார்க்கெட்டிங் கிடைச்சாச்சு.

    பசி நோக்கார்; கண் துஞ்சார்; எவ்வெவர் தீமையும் மேற் கொள்ளார்;கருமமே கண்ணாயினார்.

    அப்படின்னு இருங்க சாமி.

    வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் முயற்ச்சியை.

    ReplyDelete
  2. இளா,

    நீங்கள் தனி ஒருவராக முன்னின்று இதனை கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியதே,என்னைப்பொறுத்தவரை இவ்விருதுகள் குறித்து எந்த மேலான, கீழான , நடுவான எண்ணம் என்று ஏதும் இல்லை. யார் குடுக்கிறா, வாங்குகிறார்கள் என்று ஆராய்வதிலும் ஆர்வம் இல்லை.இரண்டு அறிவிப்புகள் வருகிறதே , ஏன், இப்படி என்று ஒரு சராசரி பார்வையாளனின் இடத்தில் இருந்து கேட்டேன்.அதுவும் இரு விருது வழங்குபவர்களும் சேர்ந்து அளிப்பதோ என்றும் எனக்கு சந்தேகம்.
    பின்னர் தெரிந்தது தனி தனி என.

    மோஹன் தாசின் பதிவில் கூட "மி த எஸ்கேப்பு" என்று தான் சொல்லி இருப்பேன்.

    அனைவருக்கும் அவர்கள் விருப்பபட்டதை செய்ய உரிமை இருக்கும் போது, சங்கமம் வைத்து விருது வழங்கவும் உரிமை உள்ளது தானே.

    உற்சாகமாகவே இருங்கள், வலைப்பதிவில் விமர்சனம் செய்வதும் , பதில் அளிப்பதும் வழக்கம் தானே.

    தமிழ் மணத்திற்கு என்று "target audience" இருப்பது போல சங்மத்திற்கும் இருப்பார்கள்!

    ReplyDelete
  3. இளா,

    நல்ல முயற்சிகளை எடுக்கும்போது எதிர்ப்பு வராமல் இருந்தால் தான் அதிசயம்.எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாமல் முயற்சிகளை தொடருங்கள்.

    ReplyDelete
  4. ஓ...இது தான்..இதுக்கு பின்னனியா...

    யாரைக் கேட்டால், இந்த நுன்னரசியல் புரியும் என்றுயிருந்தேன்... ;)))))

    புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  5. //System Adminஆ இருக்கிற நான எப்படி ஒரு website பண்ணப்போறேன்னு ஆரம்பிச்சது//

    தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்காத பிரச்சனையை தனி ஒரு சிஸ்டம் அட்மினாக வந்து தீர்த்து வைத்த விவசாயியே! வாழ்க உமது தமிழ்த் தொண்டு! :-)))

    வாழ்த்துக்கள் இளா!

    ReplyDelete
  6. அதானே.. எம்ப்பா இம்புட்டு சவுண்ட்...

    சும்மா கிடக்குற சங்கு கதை தான் ஞாபகத்துக்கு வருது...

    நல்லா இருங்கடே...

    ReplyDelete
  7. நல்வாழ்த்துகள் - தொடர்க - தவறில்லை

    ReplyDelete
  8. சென்ஷி- இந்த விருதுகள் பதிவர்களால பதிவர்களுக்கு குடுக்கப்படும் விருது எந்த தளத்தையும் சார்ந்தது இல்லீங்க. இன்னிக்கு சங்கமம் அவ்ளோதான். இதுக்கு பேரே தமிழ் வலைப்பூ விருதுகள்

    ReplyDelete
  9. நன்றி-ஆனந்த லோகநாதன், வவ்வால்,செல்வன், TBCD

    ReplyDelete
  10. CATku prepare panna figureaa setup panna yarum CAT prepare pannadha solla mattanga...adhu eppadi koosama solla thonudu ;)

    ReplyDelete
  11. சங்கமம் பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில்...

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)