மொத்தம் இருக்கிற ஒரு 400 பேர்ல 50பேர்தான் பதிவே போடுறாங்க,
அதுலயும் 30 பேர் ஜாதி பத்தி எழுதறாங்க. அப்போ
மீதி இருக்கிற 20ல 2 பேர் பங்கு வணிகம் பத்தி எழுதறாங்க
மீதி இருக்கிற 18ல 3 பேர் அவுங்க படிச்ச புஸ்தகத்தைப் பத்தி எழுதறாங்க
மீதி இருக்கிற 15ல 5 பேர் காதல்/கவிதை கருமாந்திரம்னு எழுதறாங்க.
மீதி இருக்கிற 10ல ஒருத்தர் வேலை பத்தி எழுதறாரு
மீதி இருக்கிற 9ல ஒருத்தர் செய்தியை தமிழாக்கிறாரு
மீதி இருக்கிற 8 ல 3 பேரு சரித்திரம் பத்தி எழுதறாங்க
மீதி இருக்கிற 5ல ரெண்டு பேரு ஸ்ரீலங்கா பத்தி எழுதறாங்க
மீதி இருக்கிற 3ல ரெண்டு பேரு வர்ற மெயில எல்லாம் பதிவா போட்றாங்க
மீதி இருக்கிற நான் மட்டும் தாங்க இந்த மாதிரி அறிவுப்பூர்வமா யோசனை பண்ணி புள்ளி விவரமா தரேங்க. அதுவும் உண்மையா சொல்றேங்க.
சரி, தலைப்புக்கு வருவோம் ஜல்லி பதிவுன்னு சொல்லிட்டு புள்ளி விவரம் தந்தா தப்புதானுங்களே.
உண்மையான ஜல்லிப்பதிவுன்னா என்னா தெரியுங்களா, கீழே பாருங்க புரியும். அப்படியும் புரியலன்னா ஜல்லி அடிக்கிறதா சொல்லிட்டு என்னெனமோ எழுதறாங்களே அவுங்களையே கேட்டுக்கங்க.

