சின்ன முதலை பெரிய முதலை பற்றிய இரண்டு கதைகளை பார்ப்போம். முதலில் பெரிய முதலை சின்ன முதலையை விழுங்கும் கதை இது.
முதன் முதலில் 1 ரூபாய்க்கு விமான சேவையை ஆரம்பித்து தன்னுடைய வியாபாரத்தை பெருக்க மற்ற விமான சேவை நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கறைத்தது ஏர் சஹாரா. அப்புறம் டெக்கான், ஸ்பைஸ் போன்ற நிறுவனங்கள் ஏர் சஹாராவின் புளியை திருப்பி கறைத்தது என்பதோ வேற கதை. அப்போ ஏர் சஹாரா பெரிய முதலையாக இருந்தது. அதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். போன மாதம் ஜெட் 400millionனுக்கு பேரம் ஆரம்பிச்சு 500millionனுக்கு முடிஞ்சு இருக்கு. ஏற்கனவே சஹாராவில் நிறுவனம் பணப்பிரச்சினை இருப்பதாக ஒரு பேச்சு செய்தித்தாள்கள் வெளியிட்டு இருந்தது நினைவிருக்கலாம்.
ஆக மொத்தம் பெரிய முதலைகள் மட்டுமே வியாபாரம் நடத்தும் சூழ்நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இதில் Dishnet, BPL, Aircell எல்லாம் அடக்கம். இது நல்ல ஒரு நடை முறை இல்லையென்றாலும் வேறு சாத்தியமும் இதில் இல்லை. இன்னும் சில வருடங்களில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே வியாபாரம் நடத்தும்.
அப்போ சிறிய நிறுவங்களின் கதி?
இப்போ சின்ன முதலை பெரிய முதலையை விழுங்கும் கதை. இதில் கொஞ்சம் குடும்ப அரசியலும் கூட இருக்கு. கர்நாடகாவில் நடக்கிற கூத்த பத்திதான் சொல்றேன்னு இந்நேரம் புரிஞ்சு இருக்குமே. இதுல கலாட்டாவே தந்தை-மகன் விளையாட்டுதான். நடந்தது இது தான். கர்நாடகாவில் தரம்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி நடத்துகிறது. பா.ஜ.க எதிர் கட்சியாக இருக்கிறது(ந்தது). முன்னால் பிரதம மந்திரி தேவகெளடா (அதாங்க முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் குறட்டை விட்டு தூங்கினவர் தான் இவர்). நேற்றைய நிலவரப்படி சுமார் 45 Mளாக்களுடன் தேவகெளடாவின் மூத்த மகன் குமாரசாமி பா.ஜ.க. வின் ஒத்துழைப்புடன் (?!) கவர்னரிடம் தானே ஆட்சி அமைக்க போவதாகவும் அதற்கு பெரும்பான்மை இருப்பதகவும் மனு கொடுத்திருக்கிறார். எல்லாருக்கும் வந்த அதே கேள்வி தான் எனக்கும் தோணிச்சு "அது எப்படி அப்பாவை எதிர்த்து இப்படி பேச முடியுதுன்னு". ஆனா மேட்டர் அது இல்லை சாமி. ஒரு பெரிய பிண்ணனி இருக்கு இதுல.
நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் அமோக ஆதரவு பெற்று வெற்றி பெற்றது. அதனால ஜனதா தளத்திற்க்கு அடி வயிறு கலங்போச்சு. அப்போதே காங்கிரஸை ஓரம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க ஜ,த. இப்போ குமாரசாமி பா.ஜ.க வுடன் சேர்ந்து ஆட்சி செய்தால் காங்கிரஸை ஓரம் கட்டி விடலாம் என்பது கெளடாவின் நினைப்பு.
இதுக்கு முன்னால் கெளடாவின் குடும்பத்தை தெரிந்து கொள்ளுங்கள். நம்மை எல்லாம் குடும்பத்தொழில் என்னவென்று கேட்டால் விவசாயம், நெசவுன்னு சொல்லுவீங்க. ஆனா அவர் அரசியல்ன்னு சொல்வார்(விவசாயம் தான் அவருடைய குலத்தொழில்), ஏன்னா அவரும் அவருடைய நாலு மகன்களும் அரசியல்தான் இருக்காங்க வேற எந்த தொழிலும் இப்போதைக்கு இல்லை. சரி விஷயத்துக்கு வருவோம் இப்போ பா.ஜ.க வுடன் சேர்ந்து காங்கிரஸை ஒழிச்சுட்டு மீண்டும் அப்பாவும் பிள்ளையும் ஒண்ணு சேர்ந்துப்பாங்க. இதுல இன்னொரு ஆதாயமும் இருக்கு மகனும் அரசியலுக்கு வந்துருவான் தரம் சிங்கையும் ஓரம் கட்டிலாம்.
அப்ப மக்கள் என்ன இ. வாயன்களான்னு அடுத்த தேர்தல் வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கனும், இங்கே சின்ன முதலை பெரிசை சாப்பிட்டுச்சா இல்லையான்னு நீங்கதான் சொல்லனும்.
No comments:
Post a Comment