
சந்தோஷம்!
எதுக்கு? டிராவிடுக்கு கேப்டன் பதவி கிடைச்சதே அதுக்கா இல்ல மஜா பாட்டு hit ஆயிடுச்சே அதுக்கா? இதெல்லாமா நமக்கு சோறு போட போகுது? இல்லீங்க. சந்தோஷத்துக்கு காரணமே வேற.
காவேரி எங்க ஊர் பக்கம்தான் ஓடுதுனாலும் அதனால எங்களுக்கு எந்த பலனும் இல்லை. எங்களுக்கு ஏரித்தண்ணியும், கிணத்துத்தண்ணியும் தான் உதவுது, அதுவும் மழை நல்லா பெய்தால்தான். இந்த வருஷம் வருண பகவானுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லனும். 10 வருஷம் ஆச்சு எங்க ஊர் ஏரி நிரம்பி. சுனை, ஊத்து தண்ணியெல்லாம் நான் டவுசர் போட்டு ஒடக்கான் அடிச்ச காலத்துல பார்த்தது.(10 வது லீவ்லதான் நான் லுங்கிகட்ட ஆரம்பிச்சேன்). இந்த வருஷம்தான் ஊத்து தண்ணி பள்ளத்துல(வண்டிதடம்) ஓடுது, ஏரியும் நிரம்பி வழியுது. அதுக்கு கிடா வெட்டு, பூசைன்னு நடக்குதா, இல்ல. மழை வர வைக்கதான் கழுதைக்கு கல்யாணம், பூசைன்னு நடத்துவாங்க, வந்துட்டா... மறந்துருவோம்ல. என்ன மனுஷ பயலுகடா? அதுக்கு தான் நம்மோட வலை மூலமா வருண பகவானுக்கு ஒரு பெரிய நன்றி.(வருண பகவான் BLOG படிப்பாரான்னு எல்லாம் பின்னூட்டம் போடாதீங்க).
நேத்து தோட்டத்துல நாத்து நடவு நடக்கும் போது எடுத்த புகைபடம்
Thagavalukku Nantri. Vivasaayinga Nalla irunthaathaan Naadu Nalla irukkum.
ReplyDelete"ம்மழை"யில் நனைவதாய்
ReplyDeleteஉணர்ந்தேன் உம் நடையில்
நனைந்து
யாருப்பா அது கவுண்டரு!
ReplyDeleteநம்ம கூட்டமா?
பொறாமையா இருக்கு!
ReplyDeleteபின்ன, இந்தமாதிரிப் படங்களை கணினியில்ந்தான் பல/சில வருடங்களாகப் பார்க்க முடிகிறது. அதற்கு முன்பு சென்னைக்கு வெளியிலாவது வயல்வெளிகளைக் காண முடிந்தது.
உங்களூரைச் சுற்றிவந்து, அடிக்கடி படம் போடுங்களேன்?
-மதி