
இது கரைவது கூட இசைதான்கிறாங்க
கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்கிறார்கள்.
சனீஸ்வரனின் வாகனமாம், கருப்பாய் இருந்தால் அண்ட காக்காயாம், மனிதன் இறந்தால் இவர்களுக்கு சாப்பாடாம் (முன்னோர் என்று அர்த்தமாம்)
தலைவர்களின் சிலைகளை இவர்கள் மட்டும்தான் அசிங்கப் படுத்துகிறார்காளாம்(கண்ணகி சிலை இப்போ எங்கே சாமி?).
சில வீடுகளில் தினமும் ஆகாரமிடுகிறார்கள்(எதற்கு என்று தெரியாமலே)
நாம் தலைக்கு சரியா குளிக்காமல் விட்டு புண் வந்தால் காக்கா புண்ணாம்.
வடாம் காய வைப்பதற்க்கு ஒரு Duplicate காக்கா
வேலை இல்லா மக்கள் ஒன்று கூடி எங்காவது சேர்ந்தால் காக்கா கூட்டம்.
பங்கிட்டு உண்பதற்க்கு காக்கா தான் உதாரணம் (இது ஒண்ணு தான் காக்காய் பற்றி நல்ல விதமாக தோன்றியது),
அட நம்ம சிவாஜி (ரஜினி- சிவாஜி இல்லைங்க, பராசக்தி சிவாஜி) காக்கா பாட்டுலாதாங்க அவரோட கலைப் பயணத்தினை ஆரம்பிச்சார்.
கோழி புடிக்கிறதுக்கு ஒரு அர்த்தம்ன்னா, காக்கா புடிக்கிறதுன்னா வேற அர்த்தம்
இதனோட பேர சொன்ன முகம் சுழிக்கிறவங்க எல்லோரும் இவுங்க பேர அப்படியே ஆங்கிலத்துல மொழி பெயர்த்து பேரின் கடைசியில ஒரு "N" சேர்த்தால் முகம் சுழிக்கிறவங்க எல்லாம் இதுக்கு அடிச்சுக்குவாங்க (Crow+N= CROWN)(எங்கியோ போயிட்டேடா)
என்னடா ஒரே காக்கா புராணமா இருக்கேன்னு உங்க மனசுல ஒரு கேள்வி வந்து இருக்குமே? வேற ஒண்ணும் இல்லீங்க, தோட்டதுல கேமரா வெச்சுகிட்டு ஏதாவது பட்டாம்பூச்சி, குருவி கிடைத்தால் அழகா படம் போட்டு பேர் வாங்கலாம்ன்னு நினைச்சேன், நம்ம நேரம் எதுவும் கிடைக்கலை. வல்லவனுக்கு (சிலம்பரசன் இல்லீங்க) புல்லும் ஆயுதம் அதான் ஒரு ஒத்த காக்காய புகைபடமா எடுத்து அதைப்பற்றி ஒரு வலைப்பூ. (பின்னூட்த்துல பின்னீறாதீங்க சாமீயோவ்)