மதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்கொண்டிருந்தேன். "ஹலோ" என்று கர கரத்த குரலில் சொன்னான் ராஜ்.
"என்னடா"
"மச்சான், நவீனாவை மஹாப்ஸ்ல ஹோட்டல் வாசலில் பார்த்தேன்டா. எவன் கூடவோ சிரிச்சு பேசிட்டு இருந்தாங்கடா"
"ஹ்ம்ம் தெரியும்டா, ப்ரேம் கூடதான் போயிருப்பா"

"என்ன மச்சான் இவ்வளவு அசால்ட்டா சொல்றே? அவ உன் லவ்வர்டா. மஹாப்ஸ்ல அதுவும் அங்கே வந்து சாப்பிடறளவுக்கு இங்கே என்னடா வேலை?"
"சொல்லிட்டுதான் போனாடா. அவன் அவளோட பிரண்ட்தான் மச்சான். விடு, சாயங்காலம் வந்துருவா"
"டேய், உனக்கு பதட்டமாவே இல்லையாடா? லிவிங் டுகெதர்ல இருக்கிற அவ எப்படிடா இன்னொருத்தன் கூட போலாம். விடு தப்பே செய்யலைன்னு வெச்சிக்குவோம், அவன் கூட பைக்ல வந்திருக்கா. எப்படிடா அலவ் பண்றே? டூ யூ லவ் ஹர்?"
"கண்டிப்பாடா, அவளை சின்சியரா லவ் பண்றேன். அதுல எந்த சந்தேகமும் இல்லை. நாந்தான் அவளை நல்லா பார்த்துக்கிறேனே.. அப்புறம் என்ன?"
"மச்சான். அவ இன்னொருத்தான் கூட பழகுறது உனக்கு பொஸசிவ்வா இல்லையா? "
"இருக்குடா, அவளை நான் லவ் பண்றேன். அவ என்ன செஞ்சாலும் அவ என்னோட லவ்வர் மச்சான். அவதான் பிரண்டுன்னு சொல்லிட்டு போனா. அப்படியே தப்பு நடந்தாலும் அவளுக்கு தெரியாமலா நடக்கப் போகுது? அவளை நான் நம்புறேன். "
அவளும் லவ் பண்றாதானே?
தெரியல, எப்பவாச்சும் சொல்வாடா? ஆனா அவ அன்புக்காரி மச்சான். என்னோட அத்தனை சண்டையையும் ஒரு நொடியில அவ அன்பால அடக்கிடுவா.அவ அன்பு போதாதா மச்சான். சொல்லு? அதுதாண்டா எனக்கு வேனும். அதை அவ தரா. திகட்ட திகட்ட தராடா. ஒன்னு தெரியுமா மச்சான். எவ்வளவு சண்டை வந்தாலும் என்னை விட மாட்டாடா. நான் வேனும்னு ஒத்த கால்ல நிப்பாடா. அவளுக்கு நான் வேணும்ங்கிறதுல ரொம்ப கண்டிப்பா இருப்பாடா. அது போதும் மச்சான் எனக்கு.
மச்சான் இருந்தாலும், இன்னொருத்தன் கூட..
இருக்கட்டும்டா, அவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே, ஆனா என்கிட்டதானே வரா. என்னை விட்டு போகலையே. அவ சந்தோசம் அதுவோ அதை அவ செய்யட்டும்டா.. என்னவா இருந்தாலும்..
"உன்னை... விடு மச்சான்.." போனை கடுப்புல கட் செய்தேன்.
நவீனாவை அழைத்தான் ராஜ் "பேபி, ராத்திரிக்கு என்ன வேணும், சமைக்கப் போறேன்."
"செல்லம்டா நீயு, நீ எது செஞ்சாலும் ஓகே பேபி. ம்ம்ம்மா ", என்று போனுக்கு முத்தமிட்டாள் நவீனா