நடுநிசி நாய்கள் - உருவான கதை

னிய மாலை நேரம்..
ரீ-ரிக்கார்டிங்காக வந்தார் இசையமைப்பாளர். வந்தவுடன் அவர் எந்தக் காட்சிக்கு இசையமைப்பது என்று கேட்பார் என நினைத்தால் அவர் கேட்டதோ, ”எங்கே மீதிப் பணம்”.

யக்குனர்தான் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் கூட. இயக்குனருக்கோ தர்ம சங்கடம். காரணம், ஏற்கனவே படத்தயாரிப்பில கை மீறிப் போன பட்ஜெட்,கையில் சுத்தமாக காசே இல்லாத நிலைமை. அதுவுமில்லாமல், இசையமைப்பாளர் நெருங்கிய நண்பராதலால் படம் முடிந்தபின்னாடி பணம் குடுத்துவிடலாமென இயக்குனர் நினைத்திருந்தார்.


ப்படி திடீரென்று பணம் கேட்க, கையைப்பிசைந்தவாறு, பணத்தை ரிலீசுக்குப் பின்னாடி தருகின்றேன் என இயக்குனர் சொல்ல, ரிக்கார்டிங் தியேட்டர் விட்டு வெளியே சென்று விட்டார் இசையமைப்பாளர். அதன் பிறகு இயக்குனர் மிகக் கஷ்டப்பட்டு பணம் ஏற்பாடு செய்து இசையமைப்பாளருக்கு பணம் தந்த பின்னே ரீ-ரிக்கார்டிங்கு வந்தார் இசையமைப்பாளர். படம் முடியும் முன்பே, இனிமே இந்த இயக்குனருடன் படம் இனிமே செய்வதில்லையென செய்தியாளருக்கும் சொல்லிவிடுகிறார்.

ந்த விசயத்தை வெளியே சொன்னால் இசையமைப்பாளரின பெயர் கெட்டுவிடுமென நினைத்து  எதுவும் சொல்லவேண்டாமென வாய்ப்பூட்டு பேட்டிருந்தார் இயக்குனர். ஒரு நல்ல விநியோகம் செய்யும் நிறுவனம் அந்தப் படத்தைக் கேட்டதும், குறைந்த லாபத்திற்காக அந்தப் படம் விற்கப்படுகிறது. அந்தப் படம் வாரணம் ஆயிரம், இப்போ உங்களுக்கே யார் இசையமைப்பாளர்னு தெரிஞ்சிருக்குமே. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த விசயம் வெளியே வராத ஒன்று.


படம் முடிஞ்சதுமே, இயக்குனர் முடிவு செய்த விசயம், அடுத்தப் படத்திற்கு இசையே கிடையாது. உடனடியாக ஒரு லைன் கிடைக்க படத்தை மளமளவென ஆரம்பிக்கிறார்கள். அந்தப் படம் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு, இயக்குனருக்கு சிம்புவிடமிருந்து கால்ஷீட் கிடைக்க, பாதிக்கதையுடன் படப்பிடிப்புக்கு கிளம்பினார்கள். விண்ணைத்தாண்டி வருவாயா முடிந்த பிறகு மீண்டும் நடுநிசி நாய்கள் படப்பிடிப்பை மீதியையும் முடித்தார்கள். இதுதான் நடுநிசி நாய்கள் படம் ஆரம்பித்ததன் கதை.  வி.தா.வ’ படத்திலேயே நடுநிசி நாய்கள் படத்தின் காட்சி வரும், KSRavikumar எடிட்டிங்கில் இருக்கும்போது காட்டப்படும் காட்சி, உன்னிப்பா கவனிச்சீங்கன்னா தெரிஞ்சிருக்கும். வி.தா.வ - படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே ஆரம்பித்த படம்தான் நடுநிசி நாய்கள் படம்.

மின்னலே படம் வெளிவந்தப்பவே இயக்குனரிடம் காமெடியினாலதான் படம் ஓடிச்சின்னு சொல்ல இதுவரை(அடுத்த 8 படத்துக்கும்) காமெடியனையே படத்தில் சேர்க்கவில்லை என்பது கிளைக்கதை.

13 Comments:

நசரேயன் said...

//மின்னலே படம் வெளிவந்தப்பவே இயக்குனரிடம் காமெடியினாலதான் படம் ஓடிச்சின்னு சொல்ல இதுவரை(அடுத்த 8 படத்துக்கும்) காமெடியனையே படத்தில்
சேர்க்கவில்லை//

இனிமேல காமெடியே கிடையாதா ?

புருனோ Bruno said...

அசத்துறீங்க பாஸ் !!
----
ஒரு ஐடியா

உங்களால தான் படம் ஓடுசுன்னு சொன்னா இனி அவர் படமே எடுக்க மாட்டாரா

ஹி ஹி ஹி

ILA(@)இளா said...

//இனிமேல காமெடியே கிடையாதா ?//
காமெடி இருக்கும், காமெடியன் கிடையாது..

//உங்களால தான் படம் ஓடுசுன்னு சொன்னா //
அப்படி சொன்னதாலதான் அடுத்த 9 படத்தை எடுத்தாரு..

அமர பாரதி said...

நெசமாவா? எங்கிருந்து புடிக்கிறீங்க இந்த மாதிரி தகவல்களையெல்லாம்?

ILA(@)இளா said...

//நெசமாவா? எங்கிருந்து புடிக்கிறீங்க இந்த மாதிரி தகவல்களையெல்லாம்?//
Unit மக்கள்தாங்க :). கொஞ்சம் மக்கள் இருக்காய்ங்களே

Kavitha said...

//மின்னலே படம் வெளிவந்தப்பவே இயக்குனரிடம் காமெடியினாலதான் படம் ஓடிச்சின்னு சொல்ல இதுவரை(அடுத்த 8 படத்துக்கும்) காமெடியனையே படத்தில் சேர்க்கவில்லை//

மக்கள் தியேட்டரில் அவருடைய படத்தை பார்ப்பதால் தான் படம் ஓடுகிறது என்று அவரிடம் யோரோ கூறி இருக்கிறார்கள் போல். அதனால் தான் மக்களே பார்க்க முடியாதபடி படத்தை எடுத்து விட்டார் போல்!.

ILA(@)இளா said...

//அதனால் தான் மக்களே பார்க்க முடியாதபடி படத்தை எடுத்து விட்டார் போல்!.//
:))

சி.பி.செந்தில்குமார் said...

புருனோ Bruno said...

அசத்துறீங்க பாஸ் !!
----
ஒரு ஐடியா

உங்களால தான் படம் ஓடுசுன்னு சொன்னா இனி அவர் படமே எடுக்க மாட்டாரா

ஹி ஹி ஹி


haa haa ரிப்பீட்டு

சி.பி.செந்தில்குமார் said...

அட.. நீங்க சொன்ன தகவல் எல்லாம் புதுசு

கார்த்திக் said...

படம் பாத்தீங்களா தல

ILA(@)இளா said...

//படம் பாத்தீங்களா தல//
இன்னும் இல்லீங்க கார்த்தி

க.பாலாசி said...

:-)) & ))-:

ILA(@)இளா said...

//க.பாலாசி /
ஹ்ம்ம்ம். ஒன்னியும் புரியல

Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கமம்

சங்கமம் : பதிவு, செய்திகள், குறும்படங்கள் அனைத்தும் ஓரிடத்தில்