Thursday, June 18, 2009

கபி அல்விதனா கெஹனா-மீளா நட்பு

Chatting எதுக்கு பண்றோம்? நட்பு வட்டத்தை பெரிசு பண்ணவும், புதுசா நட்பை ஏற்படுத்திக்கவும், இருக்கிற நட்பு தொடர்கிறதுக்கும், அப்படியே நேரத்தைக் காலி பண்ணவும்தான். ஆனா, சில நேரத்துல சேட்டிங் நட்பு தொடர்வது இல்லேங்கிறது மட்டுமில்லாம நிறைய கஷ்டத்தையும் குடுத்துட்டு போயிருது. நான் சொல்லப்போற விஷயமும் அதுல ஒன்னுதான்.


எனக்கும் இப்படியாப்பட்ட நட்புகள் கிடைச்சு இருக்காங்க. அதுல Professionalஆ உதவி பண்றா மாதிரி நட்பும் உண்டு. ஒரு Techinical Forum வழியா நட்பாகி பிறகு ஊர் பேர் தெரிஞ்சுகிட்டு சந்திச்சுகிட்டு இருக்கோம், இன்னும் Professionala பிரச்சினை வந்தா உடனே chattingla உக்காந்து சந்தேகம் கேட்டுக்குவோம், என் தொழிலுக்கு ஒரு பெரிய கேங்கே இருக்கு. ஆனா அவுங்க தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி இதுவரைக்கும் கேட்டுகிட்டது இல்லீங்க .Group Chatன்னு ஒன்னு நடக்கும், அதுதான் சூப்பரான மேட்டர். ஒரு குரூப் ரூம் ஆரம்பிச்சு 10 இல்லைன்னா 20 பேர் கும்மி அடிச்சுட்டு இருப்பாங்க. நாம எல்லாரும் சேர்ந்து, ஒன்னா ஒரு இடத்துல உக்காந்து பேசிக்கிற மாதிரியே இருக்கும், அது மாதிரிதான் ஒரு நாள் சென்னைகலக்கல்ஸ்'ங்கிற பேர்ல ஒரு Group Chat நடந்துகிட்டு இருந்துச்சு. அன்னிக்கு தலைப்பு பெண்ணீயம். இதைப்பத்தி மக்கள் கும்மி அடிச்சுட்டு இருக்கும் போது ஒரு PM(Personal Message) வந்துச்சு "இதைப் பத்தி பேசாதீங்க இளா, அவுங்க பேசிட்டு போகட்டும்"னு ஒரு அன்பு கட்டளை வந்துச்சு. அப்புறமா எங்கேயாவது குரூப் சேட்ல பார்த்த PM பண்ணி பேச ஆரம்பிச்சோம். அப்படியே சாப்பிடீங்களா, காபி குடிச்சீங்களான்னு பேச ஆரம்பிச்சு நட்பான அந்தப் பொண்ணு பேரு "ஜானகி" (அவுங்க பேர மாத்தி வெச்சு இருக்கேன்).


அப்படியே நாளடவில கொஞ்சம் கொஞ்சமா நட்பு நெருக்கம் ஆகி பொது விஷயங்களை விட்டு தனிப்பட்ட விஷயங்கள பேச ஆரம்பிச்சோம். அப்போ, ஜானகி yahoo, hotmail Chat Messengerல, Status மெஸேஜ் "Kabhi Alvida Naa Kehna" போட்டு வெச்சு இருப்பாங்க, அப்போ அதுக்கு அர்த்தம் என்னான்னு தெரியல. நட்பு & ஆண், பெண் என்கிற வட்டத்த விட்டு வராத நட்புன்னு ஆகிப்போச்சு. Chatன்னு இருந்த நட்பு நாளடைவில போனுக்கு மாற ஆரம்பிச்சது.


அவுங்க கூட போன்ல பேச ஆரம்பிச்சது 2003 ல இருக்கலாம் ஞாபகம் இல்லே. வாரத்துல 10-20 நிமிசம் பேசிக்குவோம், அந்த வாரம் என்ன நடந்துச்சுன்னும், கஷ்டங்களையும் சோகத்தையும், ஃபோனேல பேச ஆரம்பிச்சோம். என் பொறந்த நாளுக்கு நடுராத்திரியில வாழ்த்து சொல்ல கூப்பிட்டு எங்கம்மாகிட்ட திட்டு வாங்கி பின்னாடி சமாதானமாகி எங்க வீட்டுக்கு நல்லா தெரிஞ்ச, ஒரு நல்ல ஸ்னேகிதியா ஆனாங்க.


அவுங்களுக்கு கல்யாணம் நிச்சயமானப்போ நான் நொய்டாவுல இருந்தேன். நண்பர்களுக்கு எல்லாம் விருந்து குடுத்து சந்தோசப் பட்டேன். அவுங்க கல்யாணத் தேதி சொன்ன போதுதான் எனக்கும் இன்னும் கலக்கமாகிருச்சு. என்னோட கல்யாணத்துக்கு அடுத்த வாரம் அவுங்க கல்யாணத் தேதி குறிச்சு இருந்தாங்க. சரி, ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு தெரிஞ்சு போயிருச்சு, கல்யாணத்துலயாவது நேர்ல பார்த்துக்கலாம்னு இருந்தோம். ஆமாங்க நாங்க சந்திச்சுகிட்டதே இல்லே. அப்புறமா சென்னைதானே வரப்போறாங்க அப்போ குடும்ப சகிதமா பார்த்துக்குவோம்னு ரெண்டு பேருமே பேசி முடிவெடுத்து விட்டுட்டோம். கல்யாண வேலையில் நானும் பிஸியா இருந்தேன். ஃபோனோ, மெயிலோ கூட இல்லாம் 3 மாசம் ஓடிப்போயிருச்சு.ஜானகியோட அவுங்க சென்னை நம்பர் வாங்கலாம்னு அவுங்க வீட்டுக்கு கூப்பிட்ட போது எடுத்தது அவுங்க அண்ணன் "ஜானகி, அவளோட சென்னை நம்பரை உன்கிட்ட தரவேணாம்னு சொல்றாடா, உங்களுக்குள்ள என்னடா பிரச்சினைன்னு?"ன்னு அவுங்க அண்ணன் கேட்டபோதுதான் ஏதோ பிரச்சினைன்னு தோணிச்சு . அவுங்க அண்ணன்கிட்ட அதுக்கு மேல பேச ஒன்னுமில்லைன்னு முடிவு பண்ணிட்டு, எப்படியும் ஒரு நாள் கூப்பிடதான் போறா அன்னிக்கு கேட்டுக்கலாம்னு நினைச்சுகிட்டேன். ஆனா ஜானகி என்னைக் கூப்பிடவும் இல்லே, மெயிலும் போடலை. வயித்து பொழப்புக்காக வேற நாட்டுக்கு நானும் போயிட்டேன்.கிட்டதட்ட ஜானகியோட நட்பு முடிஞ்சுருச்சு அப்படின்னு முடிவு பண்ணி, அவுங்களைப் பத்தி சுத்தமா மறக்குற நேரத்துல தான் ஜானகிக்கிட்ட இருந்து சின்னதா ஒரு மெயில் வந்துச்சு. "இளா, நான் இப்போ 3 மாசம் முழுகாம இருக்கேன், வீட்ல சொல்லிடு, நல்லா இருக்கேன்" அவ்ளோதான். எனக்கு ஒரு சந்தோசம் மெயில் பார்க்கற வசதி வந்துருச்சு போலன்னு நெனச்சுகிட்டு "நல்லா இரு, ஒடம்ப பத்திரமா பார்த்துக்கோ" ன்னு ஒரு ரிப்ளை போட்டேன். ஒரு பத்து நாள் கழிச்சு ஒரு பெரிய மெயில் வந்துச்சு. அதுல ஜானகியோட வீட்டுக்காரர் ரொம்ப "பொஸசிவ்", வேற ஆம்பிளைங்கிட்டே பேசினா ஒரு மாதிரியா பேசறாரு, அதுக்காகதான் உன் கூட chat/mail எல்லாம் பண்ணாம இருக்கேன்" னு காரணம் சொல்லி குறைப்பட்டாலும் அவுங்க வீட்டுக்காரரை விட்டுக்குடுக்காம எழுதி இருந்தாங்க. மெயில் படிச்சதும் முடிச்சதும், ஜானகி அவுங்க அம்மா வீடல இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு. உடனே அவுங்க அம்மா வீட்டுக்கு போனடிச்சேன் எடுத்தது ஜானகிதான். நான் "ஹலோ" ன்னு சொல்றதுக்கு முன்னாடி ஜானகி "டேய் இளா, நல்லா இருக்குயா?"ன்னு ஆரம்பிக்க எனக்கு வாயடைச்சு போயிருச்சு. எனக்கு என்ன சொல்லன்னே தெரியல. வழக்கம் போல பேசுறா மாதிரி நலம் விசாரிச்சுட்டு எனக்கு வேலை இருக்குனு சொல்லி disconnect பண்ணிட்டேன்.


அவுங்களுக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் அப்பப்போ மெயில்லையோ போன்லையோ பேசிகிட்டு இருந்தோம். அதே நேரம் என் மனைவியும் முழுகாம இருந்ததால அவுங்களுக்குள்ள நிறைய பேசிக்கிட்டு இருந்தாங்க. இதுல என்ன கொடுமைன்னா ஒரு நாள் போன்ல பேசிகிட்டு இருக்கும் போது போச்சுக்கு நடுவுல "குழந்தை பொறந்ததுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் அவர் கிட்டே அறிமுகப்படுத்தி வெக்கிறேன். அப்புறமா நாம பேசிகிட்டா அவர் சந்தேகப்ப்ட மாட்டார் இல்லே, இளா" ன்னு ஜானகி கேட்கும்போதுதான் ஏதோ மண்டையில உறைச்சது. "நாம என்ன தப்பா பண்றோம்"னு கேட்கலாம்னு தோணிச்சு. ஆனா ஒன்னும் பேசாம இருந்துட்டேன்.


நம்மளால எதுக்கு அந்த பொண்ணுக்கு கஷ்டம்னு நான் அவுங்ககிட்டே பேசுறதை குறைச்சுட்டேன். கிட்டதட்ட அவுங்க போன் பண்ணினாலோ மெயில் வந்தாலோ சரியா பதில் சொல்லாம பட்டும் படாம பேச ஆரம்பிச்சேன். ஜானகி அமெரிக்கா போகும்போது ஒரு மெயில் போட்டுட்டுதான் போனாங்க, அதுக்கு கூட நான் பதில் அனுப்பல. இப்போ அமெரிக்காவுலதான் இருக்கேன்.நேத்து என் மனைவிக்கிட்ட பேசிகிட்ட போது ஜானகியைபத்தி விசாரிச்சாங்க "ஜானகியும் இங்கேதான் இருக்காங்க, ஆனா எங்கே இருக்காங்கன்னுதான் தெரியலன்"னு சொல்ல, அதுக்கு அவுங்க "அவ்வளவுதானா உங்க நட்பு?"ன்னு கேட்டாங்க. இதுக்கு என்ன பதில் சொல்றது எனக்கு தெரியலை, சும்மா சிரிச்சு சமாளிச்சுட்டேன். "கபி அல்விதனா கெஹனா" ங்கிறது கிஷோர்குமார் பாடின சல்தே சல்தேனக்ன்கிற பாட்டுல வர வரிதான். நேத்து ராத்திரி அந்த பாட்டும் கேட்கும் போதுதான் அதுக்கு அர்த்தம் புரிஞ்சது. இனிமே இந்தப்பாட்டை கேட்கவே கூடாதுன்னு நினைச்சுகிட்டு, பாட்டை நிப்பாடிட்டு தூங்க முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். ஆனா தூங்கறதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு .


பின்குறிப்பு : இது ஒரு மீள்பதிவுங்க. ரொம்ப கஷ்டப்பட்டு அவுங்க மெயில் ID கண்டுபுடிச்சி பொறந்தநாளுக்கு வாழ்த்தினேன்(2009). அதுக்கு அவுங்க ஒரு மடல் மட்டும் போட்டாங்க. இனிமே தனிமடல் போடவேணாம், பதிலும் போடவேணாம் பிரச்சினை ஆவும்னு சொன்னாங்க. ஆனா அப்படி எல்லாம் ஒரு பிரச்சினை இல்லைங்கிறது எனக்கு தெரிஞ்சப்போ கஷ்டமா இருந்துச்சு. சே, இப்படி ஒன்னு வரும் தெரிஞ்சுதானே சேட் பண்ணி நட்பு வளர்க்கிறீங்க. காதலுக்கு மட்டும்தான் பிரிவு துயர் இருக்குமா? அப்புறம் என்ன ம**துக்கு நட்பு வேணும்னு சொல்றது. இப்பவும் அவுங்க மேல இருக்கிற மதிப்புனால பதில் போடலை. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும். என்ன கொடுமைன்னா இப்போ எங்க ஊர்லதான் இருக்காங்க :)

9 comments:

 1. இந்த சல்தே சல்தே பாடல் புல்லாங்குழல் கற்றுக்கொள்பவற்கு சுலபமாக வரக்கூடிய பாடல் என்று என் நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தினார்.என் பள்ளி நாட்களில் ஆங்கில வாத்தியார் இப்பாடலை அடிக்கடி முனுமுனுப்பதையும் கேட்டிருக்கேன் ஆனால் இன்று வரை அதன் அர்தத்தை தெரிந்துகொள்ள பிரயத்னப்படவில்லை.இப்பாடலை வைத்து அழகான பதிவை மீள்பதிவு செய்து படிக்காத என்னை போன்றவர்களுக்கு திரும்ப கொடுத்ததற்கு நன்றி.
  நட்பை நான் இந்த அளவுக்கு வளர்த்துக்கொள்வதில்லை அது பலமா அல்லது பலவீனமா? என்று தெரியவில்லை.

  ReplyDelete
 2. >> இப்படி ஒன்னு வரும் தெரிஞ்சுதானே <<<

  இப்படி ரொம்ப எளிதா சொல்லிட்டு போயிர முடியுமான்னு தெரியல.

  என்ன சொல்றதுன்னு தெரியல இளா, ஆனா 5 ஸ்டார் படத்து கிளைமாக்ஸ்-ல வர்ற டயலாக் தான் நியாபகம் வருது.. அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்துவச்சவுங்கள விட அப்படிப்பட்ட கணவர்களை கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்னு சொல்ற நெலமைலதான் இருக்கோம் ?! :-(

  ReplyDelete
 3. @ ILA

  // மேட்டர் இல்லைன்னு யாராவது சொல்லட்டும், சென்ஷிக்கு உக்கார வெச்சி மொட்டை போட்டுவோம். //

  மொட்டை என்ன கும்மியே அடிச்சிடுவோம் அவ் ;)

  //அப்படியே பின்னூட்டம் போடுறவங்க எல்லார்த்தையும் மொட்டை மண்டயில குட்டு போடச் சொல்லுவோம்.. சொல்லுங்க சொல்லுங்க.//

  இதுக்கு எதுக்கு பர்மிஷ்ன் எல்லாம் ரெடி ஸ்டார்ட் ஜீட் ;)

  ReplyDelete
 4. முன்னாடியே படிச்சுருக்கேன் இளா..

  சில விசயங்கள் சொல்லாம இருக்குறதுலதான் மதிப்பு இருக்கும் போலன்னு சிலபேர் நினைச்சுக்குறாங்க.. வீட்டுக்கு வீடு வாசப்படிதான். என்ன அளவுதான் வித்தியாசப்பட்டு போயிடுது!

  அவ்ளோதான் என்னால புலம்ப முடியும் ;(

  ReplyDelete
 5. கலக்கல்.. விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒண்ணு

  ReplyDelete
 6. //சே, இப்படி ஒன்னு வரும் தெரிஞ்சுதானே சேட் பண்ணி நட்பு வளர்க்கிறீங்க//

  //காதலுக்கு மட்டும்தான் பிரிவு துயர் இருக்குமா?//

  :))
  அந்தப் பிரிவுத் துயரையும் அதே நட்புக்காகவே ஏத்துக்குங்க இளா!

  நட்பு பாராட்டிய அவர்கள் இன்று மட்டும் தயக்கம் காட்டுறாங்கன்னா, வலுவான வேறு காரணம் இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! ஆனால் நீங்கள் பாராட்டிய நட்பு வலுவானது அல்லவா! அதனால் அந்தப் பிரிவுத் துயரையும் அதே நட்புக்காகவே ஏத்துக்குங்க இளா!

  இதில் குறை சொல்ல ஒன்னுமே இல்லை!
  குறையொன்றுமில்லை! குறையொன்றுமில்லை!

  //நேத்து என் மனைவிக்கிட்ட பேசிகிட்ட போது ஜானகியைபத்தி விசாரிச்சாங்க "ஜானகியும் இங்கேதான் இருக்காங்க, ஆனா எங்கே இருக்காங்கன்னுதான் தெரியலன்"னு சொல்ல, அதுக்கு அவுங்க "அவ்வளவுதானா உங்க நட்பு?"ன்னு கேட்டாங்க.//

  ஹா ஹா ஹா
  அண்ணி கிட்ட சொல்லுங்க:

  நண்பர்கள் காணாமல் போகலாம்!
  நட்பு காணாமல் போவதே இல்லை!

  ReplyDelete
 7. கபி அல்விதா நா கேஹ்னா எனக்கு பிடிச்ச படம்

  இங்க வந்து என் ஐடியா எப்பிடின்னு சொல்லுங்க

  http://priyamudanvasanth.blogspot.com/2009/06/2_17.html

  ReplyDelete
 8. //நண்பர்கள் காணாமல் போகலாம்!
  நட்பு காணாமல் போவதே இல்லை//

  repeateyyy

  ReplyDelete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

பேங்க் மேனேஜரும் நானும்

ஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன்.  மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (2) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)